செவ்வாய், 13 மே, 2014

New York Police: தீவிரவாதிகள் பற்றி அறிய முஸ்லிம் ஒற்றர்கள் தேர்வு -

நியூயார்க்: தீவிரவாதிகளின் சதி திட்டம், அவர்கள் இருப்பிடம் போன்ற தகவல்களை அறிய அமெரிக்காவின் நியூயார்க் நகர போலீசார், முஸ்லீம்  ஒற்றர்களை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல்  கய்தா தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி புகழ்பெற்ற உலக வர்த்தக இரட்டை கோபுரங்கள் மீது மோதி தகர்த்தனர். இதில் 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் பலியாயினர். அதன்பிறகு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு,  அமெரிக்காவில் ஊடுருவும் நபர்கள் குறித்து கண்டறிய நியூயார்க் நகர போலீசார் ஒற்றர்கள் பலரை நியமித்தனர்.இதுகுறித்து நியூயார் நகர போலீசார்  விடுத்துள்ள அறிக்கையில், தீவிரவாதிகள் குறித்து துப்பு கொடுக்க சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள புலம் பெயர்ந்த முஸ்லிம்களை ஒற்றர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் இருந்து வந்த மாணவர், ஆப்கானிஸ்தானில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்தவர், எகிப்தில் டாக்சி டிரைவராக வேலை  செய்தவர் என பல தரப்பட்ட நபர்களை ஒற்றர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் உளவு துறை  துணை கமிஷனர் ஜான் மில்லர் கூறுகையில், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க இதுபோன்ற இன்பார்மர்களை  நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.இன்பார்மர்கள் கொடுத்த தகவலின் பேரில் 220க்கும் அதிகமானோரிடம் இந்த ஆண்டு போலீசார்  விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டும் இதுபோல் ஏராளமான புலம் பெயர்ந்த முஸ்லிம்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதில் புலம் பெயர்ந்த  பெரும்பாலான முஸ்லிம்கள் என்கவுன்டர் குறித்துதான் அச்சம் தெரிவித்திருந்தனர். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: