திருப்பூர்:கந்து வட்டி, கடனுக்காக சொத்துக்களை அபகரித்தல்,
ஏலச்சீட்டு மோசடி என அடாவடி நிதி நிறுவன கும்பல்களின் ஆதிக்கம், திருப்பூரில் அதிகரித்துள்ளது. இவர்களிடம் சிக்கும் ஏழை தொழிலாளர்கள், மீள முடியாமல் தவிக்கின்றனர்.திருப்பூருக்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் பிழைப்பு தேடி வருகின்றனர். வேலை கிடைத்தாலும், வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, மருத்துவ செலவு உள்ளிட்ட செலவுகள் அதிகம். இதனால் குடும்பத்தை நடத்த திணறுகின்றனர்.அவசர தேவைக்காக ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால், 200 ரூபாயை வட்டியாக எடுத்துக் கொள்கின்றனர். கடனை அடைக்க மற்றொரு கடன் என, சம்பாதிப்பதில் பெரும்பங்கை, கடன் அடைக்கவே தொழிலாளர்கள் செலவிடுகின்றனர்.சிறு சொத்துக்களை, அவசரத்திற்காக அடமானம் வைத்து, பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் சொத்துக்களை இழக்கின்றனர். இரு நாட்களுக்கு முன், திருப்பூர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், ஒரு பனியன் கம்பெனி தொழிலாளி, தனது மகள் திருமணத்துக்காக கேரளா சென்றிருந்த நிலையில், வீட்டில் திருமண பந்தலை பிடுங்கி எறிந்து, துவம்சம் செய்த கொடுமை, இதே ரகம்தான்.
கடனுக்கு வாகனம் வாங்கி வட்டி, அபராதம் செலுத்த முடியாமல், வாகனத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகளவு நடக்கின்றன. பதிவு பெறாத நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டுக்கள், பலகார சீட்டுக்கள் என பல வடிவங்களில் மோசடிகள் அரங்கேறுகின்றன. தினமும் சராசரியாக 10 கந்து வட்டி, நிதி நிறுவன மோசடி வழக்குகள் பதிவாகின்றன.பதிவு பெறாத சீட்டு நிறுவனங்கள், கந்துவட்டி, மீட்டர் வட்டி குறித்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. திருப்பூருக்கு வரும் மக்களில் 30 சதவீதம் பேர், கந்து வட்டி, மீட்டர் வட்டி கும்பலிடம் சிக்கி, சின்னபின்னமாகி வருகின்றனர். எனவே, கந்து வட்டி, நிதி மோசடி கும்பல்களை கண்டறிந்து, அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகர துணை போலீஸ் கமிஷனர் திருநாவுக்கரசுவிடம் கேட்ட போது, ''கந்து வட்டி, முறைகேடான நிதி நிறுவனம் நடத்துதல், கடனுக்கு சொத்துக்களை பறிப்பது குறித்து புகார் வந்தால், உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை தடுக்க, தனி கண்காணிப்பு குழு அமைக்கப்படும். பாதிக்கப்படுபவர்கள், போலீசில் புகார் கொடுத்தால், விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக