நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 0.5 சதவீத
வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் தோல்வி அடைந்துள்ளன.போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும்
டெபாசிட்டுகளை இழந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் வென்றன. 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வென்றிருந்தன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 9 இடங்களில் போட்டியிட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2,19,866 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது வாக்கு சதவீதத்தில் 0.5 மட்டுமே ஆகும். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,20,614 வாக்குகளை பெற்றுள்ளது.மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டையும் இழந்தன. dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக