திங்கள், 12 மே, 2014

Exit Poll இஷ்டம்போல கருத்து கணிப்பு வெளியிடும் மீடியாக்கள் !


குட்டையை குழப்பும் வாக்குக் கணிப்புகள்!

16வது மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் என்.டபிள்யு.எஸ். சி ஓட்டர் நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக மட்டும் 249 இடங்களை கைப்பற்றும் என்றும், அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 78 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகள் 53 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. மற்ற கட்சிகள் 153 இடங்களில் வெற்றி பெறும் என்றும் இதில் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. போனால் போகிறது நாமும் ஒரு கறுத்த கணிப்பை இத்தால் அறிவிக்கிறோம் அவாளுக்கு நிச்சயம் பிடிக்கும் அதிமுக 40.பாஜக 400 ! திமுக 0 காங்கிரஸ் 4, மீதியை வாசகர்களே பில் பண்ணுவாங்க 

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 27 இடங்களை கைப்பற்றும் என்று சி ஓட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. திமுக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக 2, தேமுதிக 1, பாமக 1, மதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என்.ஐ.பி.என்., டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு 22 முதல் 28 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், தி.மு.க.,வுக்கு 7 முதல் 11 தொகுதிகளும், பா.ஜ., கூட்டணிக்கு 4 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி 272 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஹெட்லைன்ஸ் டுடே டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 115 தொகுதிகள் வரையிலும், மற்றவர்கள் 156 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு 20 முதல் 24 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், தி.மு.க.,வுக்கு 10 முதல் 14 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், தே.ஜ., கூட்டணிக்கு 5 தொகுதிகளும், காங்.,க்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ்நவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு 31 தொகுதிகளும், தி.மு.க.,வுக்கு 7 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. nakkheeran.in 

கருத்துகள் இல்லை: