ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் தங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாய்மொழி
உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
பழிவாங்கப்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில், ஓய்வு பெற்ற 85 உயர்
அதிகாரிகள் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்
இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதை தடுக்கும் வகையில், அவர்களின் நியமனம்
மற்றும் பணியிட மாறுதல்களை முடிவு செய்ய வாரியம் ஒன்று அமைக்க வேண்டும்
என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் இந்த
வாரியத்தை அமைப்பதை பற்றி முடிவு எடுக்குமாறும் கூறியுள்ளது.
அரசியல்வாதிகள் தலையீட்டால் நிர்வாக பணிகள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள நீதிமன்றம், இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. பணி காலத்தை நிர்ணயிப்பதன் மூலம் நிர்வாகம் செம்மையாக நடக்க வழி ஏற்படும் என்றும் கூறியுள்ளது. >உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு குறித்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. உச்சநீதிமன்றம் முதல் முறையாக இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில் இதன் மூலம் நிர்வாகம் செம்மையாக, தரமாக நடக்க வழி ஏற்பட்டுள்ளது என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக