வியாழன், 31 அக்டோபர், 2013

பிரெஞ்ச் உளவுத்துறை 20 மில்லியன் யூரோ கொடுத்து பணயக் கைதிகளை மீட்டது உண்மையா?

மூன்று ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 4 பிரெஞ்ச் பிரஜைகள், திடீரென
விடுவிக்கப்பட்ட செய்திதான் தற்போது சர்வதேச மீடியாவில் ஹைலைட். அல்-காய்தாவின் வடக்கு ஆபிரிக்க பிரிவால் கடத்தப்பட்டு, பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இந்த நான்கு பேரையும் விடுவிக்க, பிரான்ஸ் அரசு பணயத் தொகையான பணம் கொடுத்ததா என்ற சர்ச்சை பெரிதாக தொடங்கியிருக்கிறது.
பணம் கொடுத்ததை பிரெஞ்ச் அரசு மறுத்தாலும், பிரெஞ்ச் அரசின் உளவுத்துறை ஊடாக தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறியது என்கிறார்கள்.
கொடுக்கப்பட்ட பணம், பிரான்ஸ் அரசின் ரகசிய பட்ஜெட் ஒன்றில் இருந்து போனது என்று உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடு ஒன்றில் வைத்து இந்தப் பணம் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தின் பின்னரே அல்-காய்தா வடக்கு ஆபிரிக்க பிரிவான ‘இஸ்லாமிய மக்ஹ்ரெப்’ தீவிரவாத அமைப்பினர் பணயக் கைதிகளை விடுவித்தனர் என்றே பரவலாக கதை அடிபடுகிறது.

பிரபல பிரெஞ்ச் மீடியா Le Monde, பிரெஞ்ச் அரசு 20 மில்லியன் டாலர் பணயத் தொகை கொடுத்துதான், இந்த நால்வரையும் மீட்டு அழைத்து வந்தது என்ற செய்தியை, உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது. Le Monde மீடியா, உளவுத்துறைக்கு நெருக்கமானவர்கள் என்பது, மீடியா உலகில் அனைவரும் அறிந்த உண்மை.
பணம் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் நேற்று பிரான்ஸ் வந்து சேர்ந்தபோது, இந்த விடுவிப்பின் பின்னணியில் பிரான்ஸ் அரசு இருக்கின்றது என தெளிவாக தெரிந்தது.
விடுவிக்கப்பட்டவர்களை ஆபிரிக்காவில் இருந்து அழைத்து வர, பிரெஞ்ச் ஜனாதிபதியின் பிரத்தியேக விமானம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது (போட்டோ-1). அந்த விமானத்தில் சென்று பணயக் கைதிகளுடன் திரும்பி வருவதற்காக, பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சர் Jean-Yves Le Drian, வெளியுறவுத்துறை அமைச்சர் Laurent Fabius ஆகிய இருவரும் ஆபிரிக்கா வரை சென்றனர்.
கடத்தி விடுவிக்கப்பட்டவர்கள், நாட்டின் முக்கிய இரு அமைச்சர்களால், ஜனாதிபதியின் விமானத்தில் அழைத்து வரப்படுகிறார்கள் (போட்டோ-2) என்ற செய்தி வெளியானதும், இதற்கு முக்கியத்துவம் அதிகமானது. விமானம் வந்து இறங்கப்போகும் Villacoublay ராணுவ விமானத் தளத்தில் இவர்களை வரவேற்க ஏராளமான கூட்டம்.
ஆபிரிக்காவில் இருந்து வந்து இறங்கியவர்களுக்கு உச்சகட்ட மீடியா கவரேஜ் கொடுக்கப்பட்டது (போட்டோ-3). பிரெஞ்ச் ஜனாதிபதியே நேரில் சென்று இந்த நால்வரையும் வரவேற்றார் – பார்க்கவும் ஜனாதிபதியின் பாடி லேங்குவேஜை. (போட்டோ-4). போட்டோக்களுக்கான லிங்க், கீழேயுள்ளது:
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: