செவ்வாய், 29 அக்டோபர், 2013

தங்கப்புதையல் கிடைக்கவில்லை ! சாமியார் கைதுசெய்யப்படுவாரா ? உ.பி கோட்டையில் எதுவுமில்லை ! மத்திய அரசை இந்த ஒரு அபத்தத்திற்காகவே டிஸ்மிஸ் செய்யலாம் !

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை
முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தனை நாளாக தேடியும் ஒருகிராம் தங்கத்தை கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். சாமியார் கனவு பொய்யானது.... உ.பி கோட்டையில் தங்கப்புதையல் எதுவுமில்லை!' இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857-ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்திடம் ஷோபன் சர்க்கார் என்ற துறவி கூறினார். இதன் அடிப்படையில், அக்கோட்டையை தோண்டி பார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி மத்திய அரசின், தொல்பொருள் ஆய்வு துறையினர், கடந்த 18 ஆம் தேதி முதல் கோட்டையை தோண்ட துவங்கினர். யாரோ ஒருவர் கனவு கண்டு கூறியதை நம்பி மத்திய அரசு இவ்வாறு புதையல் தோண்டுவது கேலிக்குரியது என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், உன்னாவோ கோட்டையில் இத்தனை நாட்களும் அகழாய்வு செய்ததில், அங்கு தங்கப்புதையல் எதுவுமில்லை என தெரியவந்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: