திங்கள், 28 அக்டோபர், 2013

மைக்கல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமான மருத்துவர் விடுதலை

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம்
அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது. அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. அப்போது ஜாக்சனின் குடும்ப டாக்டர் அரக்கத்தனமாகவும், தீமையாகவும் செயல்பட்டுள்ளார் என்றும் மரணத்துக்குக் காரணம் மருத்துவரே என்றும் கூறி 2011-ம் ஆண்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டாக்டர் முர்ரே இரண்டு ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த நிலையில் டாக்டர் முர்ரேயின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் மயக்க மருந்தை அதிகமாக மைக்கேல் ஜாக்சனுக்கு கொடுத்ததாலேயே அவர் இறந்தார் என்று கூறப்பட்டது.


இதுகுறித்த விசாரணையை கடந்த இரண்டு மாதங்களாக நீதிபதிகள் குழு விசாரித்து வந்தது. இந்நிலையில் அவரது கவனக்குறைவாலேயே மைக்கேல் ஜாக்சனின் மரணம் நிகழ்ந்ததுள்ளது. மேலும் மருத்துவரின் நன்னடத்தையை கவனத்தில் கொள்கையில், டாக்டர் முர்ரே அவரது கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் நெவாடாவில் உள்ள மருத்துவ உரிமையை புதுப்பித்துக்கொண்டு அவரது பணியை சிறப்பாக தொடரலாம் என்று லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் அவரை விடுதலை செய்தார்.

இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி இன்று காலை, லாஸ் ஏஞ்செல்ஸ் சிறைச்சாலையின் பின்புற கேட்டின் வழியாக ஷெரிப்பின் காரிலேயே டாக்டர் முர்ரே பத்திரமாக அழைத்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர் விடுதலையாவது குறித்த செய்தியறிந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சிறை வாசலில் காத்து நின்று ஏமாந்து போயினர். டாக்டர் தப்பித்து செல்வதற்கு உதவியதாக ரசிகர்கள், லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப்பிற்கு கண்டனம் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை: