அமெரிக்கவாழ் இந்திய தம்பதியரான சதிஷ்-யாஸ்மின் குப்தா
வழங்கியுள்ளனர். இந்த தொகையானது டல்லாஸ் பல்கலை க்கழக கட்டிட விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.;
வெவ் வேறு மதத்தை சேர்ந்தவர்களான சதிஷ், யாஸ்மின் இருவரும் இந்தியாவில்
இருந்து அமெரிக்கா சென்றபோது, முதல்முறையாக இந்த டல்லாஸ் பல்கலைக்
கழகத்தில் பயின்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சதிஷ் குப்தா கூறியதாவது:-;
இந்த புதிய கலைக்கட்டிடம் தொடங்கப்பட்டவுடன் வர்த்தகக் கல்லூரியின்
வகுப்புகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இயங்கும். உலக
கலாச்சாரங்களுக்கிடையே ஒரு புரிதலையும் வேறுபாட்டையும் பற்றி ஆராய்வதற்கான
ஒரு உலக அரங்காக இந்த வர்த்தகக் கல்லூரி மாறும் என்பது எங்கள் கனவு. மேலும்
இந்த கல்லூரியானது, மாணவர்களை உலகத் தலைவர்களாக மாற்றும் என்று நாங்கள்
நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர்கள் வழங்கியுள்ள இந்த தொகையானது கடந்த 57 வருட கால அமெரிக்க வரலாற்றில்
இல்லாத அளவிற்கு இதுவே அதிகமான நன்கொடையாக கருதப்படுகிறது. .ilankainet.com<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக