திங்கள், 28 அக்டோபர், 2013

நரேந்திர மோடி: நிதிஷ் குமார் ஒரு துரோகி ! புலிகளிடம் இருந்து இந்த துரோகி லேபில் வியாபாரத்தை மோடி வாங்கிவிட்டார்

‘‘பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு துரோகி’’ என பாட்னாவில் நடந்த பா.ஜ கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தையும் பொருட்படுத்தாமல், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசியதாவது: பா.ஜ.வில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் ஏன் விலகினார் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயன், ராம் மனோகர் லோகியா போன்ற பெருந்தலைவர்களை முதுகில் குத்தியவர்களால், நீண்ட காலமாக நட்புடன் இருந்த பா.ஜ.வை விட்டு எளிதில் வெளியேற முடியும்’’ என நான் கூறிவருகிறேன். காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் குரு ஜெயப்பிரகாஷ் நாராயன். ராம் மனோகர் லோகியாவின் சீடர் என கூறிக் கொள்ளும் நிதிஷ் குமார் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் உறவாடுகிறார்.


பீகார் மக்களை ஏமாற்றிய நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. கடந்த 1999ம் ஆண்டில் நிதிஷ் குமாரின் முன்னாள் சமதா கட்சியை விட இரு மடங்கு அதிக பலத்தில் நாங்கள் இருந்தபோதும், முதல்வர் பதவியை அவருக்காக தியாகம் செய்தோம். நிதிஷ் குமாருக்காக, சுஷில் குமார் மோடி முதல்வர் ஆவதையும் பா.ஜ தியாகம் செய்தது. பீகார் மாநில பா.ஜ தலைவர்கள் பலர் அழைப்பு விடுத்தும், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பீகாரில் காட்டாட்சியை ஒழிப்பதற்காகவும், தே.ஜ கூட்டணியின் ஒற்றுமையை காக்கவும், நான் அவமானங்களை தாங்கி கொண்டேன்.

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என மாநில பா.ஜ கோரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு நீங்கள் இன்னும் 200 நாட்கள் காத்திருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.

குண்டு வெடிப்பு வருத்தம் அளிக்கிறது

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி, ‘‘பாட்னா குண்டு வெடிப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இது துரதிருஷ்டமானது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதிக்காக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

‘ரயில்வே பற்றி எனக்குதான் அதிகம் தெரியும்’

பாட்னா பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘‘பீகார் மாநிலத்தில் இருந்து பலர் ரயில்வே அமைச்சர்களாக இருந்துள்ளனர். இருந்தாலும், அவர்களை விட எனக்குதான் ரயில்வே துறையை பற்றி அதிகம் தெரியும். ஏனெனில், சிறுவனாக இருந்தபோது ரயில்களில் டீ விற்று இருக்கிறேன். டிக்கெட் பரிசோதகர்களையும், போலீசாரையும் தாஜா செய்து ரயில்களில் டீ விற்பதில் உள்ள கஷ்டம் எனக்கு நன்றாகவே தெரியும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: