முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்திய அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தான் இலங்கை வடக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் நடந்தது.
இதுபோல தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இன்னும் போலீஸ் துறை உள்பட பல்வேறு உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த உரிமையை இந்திய அரசு தான் பெற்று தர முடியும்.
இதற்கு இலங்கை அரசுடன் இணக்கமான உறவு இருக்க வேண்டும். உறவை துண்டித்து விட்டு உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியாது.
எனவே இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்.
நரேந்திர மோடி ஊதி பெரிதாக்கப்படும் ஒரு பலூன். அவர் காணாமல் போய்விடுவார். மோடிக்கு படேலை பற்றியோ, காங்கிரஸ் தலைவர்களை பற்றியோ பேச தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.எம் பழனிச்சாமி, ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ரவி, திட்டக்குழு துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் விஜய பாஸ்கர், சுப்பிரமணி உள்பட பலர் இருந்தனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக