ஞாயிறு, 27 அக்டோபர், 2013

திமுகவில் எல்லா மட்டத்திலும் ஸ்டாலின் ஆதரவு எதிர்ப்பு என்று இரண்டு கோஷ்டிகள் ! எகிறி பாய்ந்த அழகிரி !

எல்லா மாவட்டத்திலுமே, இரண்டு கோஷ்டிகள்; ஒன்று ஸ்டாலின் ஆதரவு
கோஷ்டி; மற்றொன்று எதிர்ப்பு கோஷ்டி. ஆக, இதில் நான் கோஷ்டி ஏற்படுத்துவதாக சிலர் சொல்வதும், அதை தலைவர் உட்பட எல்லாரும் நம்புவதும் வேதனையாக இருக்கிறது.
 முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலருமான அழகிரி, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும், கட்சியில் மீண்டும் பரபரப்பு துவங்கி உள்ளது. ஒன்றரை மாதமாக, அமெரிக்காவில் தன் மகள் வீட்டில், அழகிரி தங்கியிருந்தார். கட்சி விவகாரங்கள் எதிலும் தலையிடாமல் ஓய்வில் இருந்த அவர், 15ம் தேதி சென்னை திரும்பினார்.அதிகாலை, 2:00 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்த அவர், நேராக மதுரை சென்றுவிட்டார். இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு, சென்னை வந்த அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியைச் சந்திக்க காத்திருந்தார்; ஆனால், சந்திக்கவில்லை. கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற அவர், தாயார் தயாளுவை சந்தித்து, நீண்ட நேரம் பேசியுள்ளார்.
அடுத்த நாளும் சென்னையில் தங்கியிருந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்காமலேயே மதுரை திரும்பிவிட்டார். இந்நிலையில், சென்னை வந்ததும் கருணாநிதியுடன், அழகிரி, தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. தி.மு.க.,வில் இப்போது உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. அழகிரி அமெரிக்காவில் இருக்கும் நேரத்தில், கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி, அழகிரி தன் வருத்தத்தை கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும், "இவ்வளவு அவசரமாக நடத்துவது ஏன்?' எனக், கேள்வி எழுப்பியதாகவும், அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகின்றன.மேலும், "டிச., 15ம் தேதி கூட்டப்படும், கட்சிப் பொதுக்குழுவில், கட்சி நிர்வாக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை' என்று, தி.மு.க., தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. ஆனாலும், ஸ்டாலினுக்கு பொதுச் செயலர் பதவி தரப்பட உள்ளது என்றும், சிகிச்சையில் இருக்கும் அன்பழகன், ஓய்வெடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.அந்த செய்திகள் சம்பந்தமாகவும், அழகிரி பேசியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. "தலைவர் மற்றும் பொதுச்செயலர் பதவிகளில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது; அப்படி நடக்குமானால், தென்மண்டல அமைப்புச் செயலரான எனக்கு, முதன்மைச் செயலர் பதவி தரப்பட வேண்டும்' என, அழகிரி நிபந்தனை விதித்துள்ளதாகவும், அந்ததகவல்கள் தெரிவிக்கின்றன.>தயாளுவை சந்தித்து பேசிய அழகிரி, கட்சி நிகழ்ச்சிகள், தலைவரின் செயல்பாடு, சகோதரர் ஸ்டாலினின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அழகிரி என்ன பேசினார் என்பது குறித்து, கட்சி வட்டாரங்களில் வெளியான தகவல்கள் வருமாறு: உட்கட்சி தேர்தல், ஸ்டாலினைத் தலைவராக்கும் நோக்கத்துடனேயே நடக்கிறது. எல்லா மாவட்டங்களிலுமே கட்சி, இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. கட்சி, இரண்டாவதற்கு நான் தான் காரணம் என்றால், நான் ஒதுங்கி இருந்த நேரங்களில் கட்சியை ஒன்றாக்கி < இருக்கலாமே; ஏன் செய்யலை? எல்லா மாவட்டத்திலுமே, இரண்டு கோஷ்டிகள்; ஒன்று ஸ்டாலின் ஆதரவு கோஷ்டி; மற்றொன்று எதிர்ப்பு கோஷ்டி. ஆக, இதில் நான் கோஷ்டி
ஏற்படுத்துவதாக சிலர் சொல்வதும், அதை தலைவர் உட்பட எல்லாரும் நம்புவதும் வேதனையாக இருக்கிறது. கட்சிக்காக உழைத்த யாரையும் நாம் இழக்க முடியாது, அதற்கு இனிமேல் நான் விட மாட்டேன்.கட்சியில், நானும் தென்மண்டல அமைப்புச் செயலர் என்ற பதவியில் தான் இருக்கிறேன். ஆனால், என் நிகழ்ச்சி தொடர்பாக எந்த செய்தியும் வெளியிடுவதில்லை. இதே நிலைமை நீடித்தால், ஒன்றாகஇருக்கும் ஊர்களிலும் கூட விரைவிலேயே, கட்சி இரண்டாகும்; தவிர்க்க முடியாது.எல்லா மாவட்டங்களிலும், அ.தி.மு.க.,வில் இருந்து கட்சி மாறி வந்தவர்களின் ஆதிக்கம் தான், பெரிய அளவில் உள்ளது. கட்சிக்காக பரம்பரை, பரம்பரையாக உழைத்தவர்களை எல்லாம் நாம் மதித்துத் தான் ஆகவேண்டும். இல்லையென்றால், அதிரடியாக களமிறங்கி அவர்களையெல்லாம் நான் காப்பாற்றுவேன். இவ்வாறு, அழகிரி பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, அழகிரி தரப்பில் கேட்டால், "சில நாட்களாகவே கட்சி செயல்பாடு மீது அழகிரி கடும் அதிருப்தியுடன் இருக்கிறார். பல்வேறு சூழ்நிலைகளால் அவர் அமைதியாக உள்ளார். எந்த நேரம் அவருக்கு தாங்க முடியாத கோபம் வருகிறதோ, அப்போது அவர் விடுத்த எச்சரிக்கைபடியே எல்லாவற்றையும் செய்ய துவங்கிவிடுவார்' என, தெரிவித்தனர்.
நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: