வெள்ளி, 1 நவம்பர், 2013

வாசன் ராஜினாமா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி தேறாது என்ற முடிவில் வாசன் ?

சென்னை: இம்மாதம் 15ம் தேதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த்
மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதா, அடுத்தக் கட்டமாக நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் நாளை, தீபாவளியன்று, சென்னையில் உள்ள தன் ஆபீசில், கருத்து கேட்க, மத்திய அமைச்சர் வாசன் திட்டமிட்டுள்ளார். கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்டறிந்த பின், முக்கிய முடிவை வாசன் எடுப்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரட்டம் தீவிரமாக நடந்த போது, அப்போதைய முதல்வர் காமராஜருக்கு, டில்லியிலிருந்து, இந்தி மொழியில் கடிதம் வந்தது, அந்தக் கடிதத்தை கிழித்தெறிந்து, அதே கவரில் போட்டு திருப்பி அனுப்பிய வரலாறு நடந்துள்ளது. வாசனுக்கு முன்பிருந்த அரசியல் செல்வாக்கு இப்போது அவ்வளவாக இருக்க வாய்ப்பே கிடையாது. காங்கிரஸ் என்றாலே இன்றைய இளைஞர்கள் காத தூரம் ஓடுகின்றார்கள். வாசனின் சமயம் பார்த்து வெளியேறும் திட்டத்திற்கு இதுவே நொண்டிச்சாக்கு.
இந்தி திணிப்பை எதிர்த்து, மத்திய அமைச்சர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காவிரி பிரச்னைக்காக, மத்திய அமைச்சர் பதவியை, காங்.,கின், வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா செய்துள்ளார். சென்னையில் நடந்த உலக தமிழர்கள் மாநாட்டில், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் பங்கேற்றால், சத்தியமூர்த்தி பவனில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என, அறிவித்து, கொடி ஏற்றிய அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அவரது தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.இந்நிலையில், காமன்வெல்த் மாநாட்டின் பிரச்னையில், தமிழக காங்கிரஸ் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகிறது.

தமிழக நலன் சார்ந்து, வாசன் தலைமையில் ஒரு அணி குரல் கொடுக்கிறது. "வெளிவிவகாரத் துறை பிரச்னையில், மாநில உணர்வுகளுக்கு இடமில்லை' என, இன்னொரு காங்.,சினர் அணி வாதிட்டு வருகிறது. இந்நிலையில், டில்லியில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட நிலைக்குழு கூட்டத்தில், "காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார்' என்ற முடிவு எடுத்துள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை, வாசன் டில்லியில் நேரில் சந்தித்தார்.பிரதமரிடம், வாசன், வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுவதாவது: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது; குறிப்பாக, நீங்கள் அங்கு செல்லக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளை என் தந்தை மூப்பனார் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். நானும், அவரது வழியை பின்பற்றி வருகிறேன். தமிழக மக்களின் உரிமையை விட்டுத்தர முடியாது. மற்ற மாநில மக்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தமிழக மக்களுக்கு தரப்படுவதில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர், காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தியுடன் காணப்படுகின்றனர். இவ்வாறு, பிரதமரிடம் வாசன் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது dinamalar.com

கருத்துகள் இல்லை: