பீஜிங் : செய்திகளை தரும் 100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது.
அரசுக்கு எதிரான குரல் கொடுக்கும் மக்கள் பத்திரிக்கையாளர்களின் கருத்து
சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில்
வெப்சைட் மூலம் கருத்துக்களை சொல்வது அதிகரித்து வருகிறது. அதிலும் சமீப
காலமாக செய்திகளை தரும் வகையில் 100க்கும் மேற்பட்ட வெப்சைட்கள்
தலைதூக்கின. இதில், அரசு மற்றும் அரசியல் நடவடிக்கைள் குறித்த செய்திகளும்
இந்த வெப்சைட்களில் இடம்பெற்றன. மாகாண அளவில் நிலவும் அரசியல் விவகாரங்கள்
தான் அதிகம் இடம் பெற்றன.
இந்த வெப்சைட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், ஓசைப்படாமல், இத்தகைய வெப்சைட்களை முடக்கும் வேலையில் சீன அரசு இறங்கியது. கடந்த மே மாதம் ஆரம்பித்த இந்த அதிரடி நடவடிக்கைக்கு இதுவரை 107 வெப்சைட்கள் முடங்கியுள்ளன. மக்களிடம் பிரபலமாக விளங்கிய ‘வாய்ஸ் ஆப் த பீப்பிள், டெமாக்ரடிக் லீகல் சூப்பர்விஷன் நெட், சைனீஸ் சிட்டிசன்ஸ் நியூஸ், ஜஸ்டிஸ் ஆன்லைன் ஆகியவை அடங்கும்.
‘இந்த வெப்சைட்கள், ஆன்லைன் தொடர்பான அங்கீகாரம் அளிக்கும் அரசின் தேசிய இன்டர்நெட் கட்டுப்பாட்டு மையத்திடம் உரிமம் பெறவில்லை. அடையாளம் தெரியாத சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை தந்து மக்களை குழப்ப முயற்சிப்பது தெரியவந்தது. அதனால் இந்த சட்டவிரோத வெப்சைட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டதுÕ என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக