திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம்
முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி(30). பிகாம்
பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள்
என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில்
நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி
பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு
வருகிறதுஇதுபற்றி தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை
முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி
என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது
பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில்
ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும்
நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான்
வரத்துவங்கினர் என்றார் dinakaran,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக