“ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 மீனவர்களை விடுவிக்க
அங்குள்ள இந்திய தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கடலுக்குச் சென்ற 16 மீனவர்கள் ஈரானில் சிறையில் உள்ளதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் 24ம் தேதி எனக்கு அளித்த மனுவின் மூலம் இந்த தகவல் என் கவனத்திற்கு வந்தது.
மீனவர்கள் அனைவரும் சவுதிய அரேபியாவை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது, தெரியாமல் ஈரான் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். கடந்தாண்டு, டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் போது ஈரான் அதிகாரிகள் மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எவ்வித சட்ட உதவியும் இல்லாமல் அவர்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஈரான் கோர்ட் அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அளித்துள்ளது. அபராதமாக ஒவ்வொருவரும் 5,760 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என, கூறியுள்ளனர்.
அபராதம் கட்டமுடியாமல் மீனவர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். சிறைக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் இந்திய தூதரகத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
மீனவர்களுக்கு சட்ட உதவி அளிக்க இந்திய தூதரகம் எந்த முயற்சியும் செய்ததாக தெரியவில்லை.
இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மீனவர்களை விடுவிக்க தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த மீனவர்கள் சவுதி நிறுவனத்துக்காக மீன் பிடித்ததால், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகமே மீனவர்களுக்கான அபராத தொகையை செலுத்துமாறு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக