சென்னை: சுவேதா மேனன் படத்துக்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம்
எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் நடித்திருக்கும் படம் களிமண்ணு. இதில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்தார். பிரசவம் நடப்பதை இயக்குனர் பிளஸ்சி படமாக்கினார். இதற்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் பிரசவ காட்சி இடம் பெற்றால் எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.இந்நிலையில், இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்துக்கு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். இதுபற்றி இயக்குனர் பிளஸ்சி கூறுகையில், ‘பிரசவ காட்சி என்பது இப்படத்துக்கு முக்கியமான தேவை. எனவேதான் சுவேதா மேனன் மற்றும் அவரது கணவரிடம் அனுமதி பெற்று நிஜ பிரசவ காட்சியை படமாக்கினேன். எந்த காட்சியையும் துண்டிக்காமல் தணிக்கை குழுவினர் சான்றிதழ் தந்திருக்கின்றனர்Õ என்றார்.
ஆனால் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் தற்போது
படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்திருந்தாலும் பிரசவ காட்சியை திரையில் காட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே அக்காட்சியை நீக்கிவிட்டுதான் திரையிடுவோம் என்று அறிவித்துள்ளது. இதுபற்றி படக் குழுவினர் கூறுகையில், தணிக்கை குழுவை விட திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக