திங்கள், 29 ஜூலை, 2013

Pakistan நாளை அதிபர் தேர்தல்: நவாஸ் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு


Pakistani lawmakers are set to elect the
country's next president in a vote that has been marred by controversy despite widespread agreement that the ruling party's candidate will likely emerge as the winner.
The expected victor in Tuesday's election is Mamnoon Hussain, a textile businessman who has been a longtime member of the ruling Pakistan Muslim League-N party and briefly served as the governor of southern Sindh province in 1999.
பாகிஸ்தானின் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம்
நிறைவடைகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலை நடத்த பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் கமிஷன் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வரும் 30-ம் தேதி அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை இரவே முடிவு அறிவிக்கப்படும். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய ஆதரவாளரான மம்னூன் உசைனும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி வஜிஹுதீன் அகமது ஆகியோர் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரசா ரப்பான் போட்டியில் இருந்தார்.


ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று கோர்ட் அளித்த தீர்ப்பைக் கண்டித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தேர்தலை புறக்கணித்தது. தனது வேட்பாளரையும் வாபஸ் பெற்றது. மிகப்பெரிய கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளதால், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி (நவாஸ்) வேட்பாளர் மம்னூன் உசைன் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரான ஆக்ராவில் மம்னூன் உசைன் பிறந்தார். 1947-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உருது பேசும் மக்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தபோது, உசைன் குடும்பமும் பாகிஸ்தான் சென்றது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் ஜனாதிபதியாக சிறப்பாக பணியாற்றுவேன் என்றும், ஜனாதிபதியாக தேர்வு பெற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் உசைன் கூறுகிறார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: