திங்கள், 29 ஜூலை, 2013

குழந்தை திருட்டை தடுக்க அரசு மருத்துவமனைகளில் அவுட் சோர்சிங் முறையில் பாதுகாப்பு படைகள்!


 தமிழகத்தில் 200 படுக்கைக்கு அதிகமாக 41 அரசு மருத்துவமனைகள் செயல்படுகிறது. சென்னையில் மட்டும் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை உட்பட 19 அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. தினமும் 1 லட்சம் உள்நோயாளிகளும், 6 லட்சம் வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்களிடம் நகை, பணம் பறிப்பது, குழந்தைகளை கடத்துவது நடக்கிறது. சிகிச்சை பெறுபவர்களிடம் அத்துமீறல் நடக்கிறது. சிலர் கும்பலாக வந்து டாக்டர்கள், பணியாளர்ளிடம் தகராறு செய்வது, தாக்குதல் நடத்துவதும் நடக்கிறது.
இதை தவிர்க்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ள இந்த உத்தரவில், ‘அவுட் சோர்சிங்‘ என்ற வெளி நபர் பணி நிரவல் முறையில் அரசு மருத்துவமனைனகளில் செக்யூரிட்டி மற்றும் வாட்சுமேன்கள் நியமிக்கப்படுவர்.

இதன்படி, 776 செக்யூரிட்டி மற்றும் 1400 வாட்சுமேன்களை பணியில் ஈடுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டி, வாட்சுமேன்கள் பணியில் ஈடுபடுவர். கோவையில் 15 செக்யூரிட்டி, 26 வாட்சுமேன்கள், திருச்சியில் 21 செக்யூரிட்டி, 22 வாட்சுமேன்கள் பணியில் ஈடுபடுவர். 3 ஷிப்டுகளில் செக்யூரிட்டி, வாட்சுமேன்கள் பணியாற்றுவார்கள்ÕÕ என கூறப்பட்டுள்ளது.dinakaran.com

கருத்துகள் இல்லை: