புதன், 31 ஜூலை, 2013

காணாமல் போன பிள்ளை Facebook மூலம் குடும்பத்தோடு இணைந்துள்ளார்



PuneIt seems to be a script straight from a Bollywood movie.
Beaten up by his mother for not studying, 12-year-old Ankush Domale had run away from home in February 2002. Now, exactly 12 years later, he has been reunited with his family, thanks to Facebook.
Upset with his mother, Ankush had run away to Nanded, over 400 kilometres away from his Pune home. There he started serving the devotees at a Gurudwara. Impressed by his dedication and hard work, the guru there took him to Ludhiana where Ankush started living at the Reru Saheb Gurudwara. He donned a turban and was given the name Gurban Singh.புனே,  பெற்றோர் அடித்து கண்டித்த காரணத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞர் ஒருவர் தற்போது பேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. அவருக்கு 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார்.
அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கி விட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
இதனிடையே தனது மகனைக் காணாத அங்குஷ் தாயார் ஹேமலதா அழுது கொண்டே இருந்தார். இதனால் மகனைத் தேடும் முயற்சியில் ்ஈடுபட்டார். அங்குஷ்சிற்கு ஒரு சகோதரன் இருக்கிறான் அவரது பெயர் சந்தோஷ்.
கடந்த இரண்டு வருடங்களாகவே காணாமல் போன தனது சகோதரனை தேடும் முயற்சியில் ்ஈடுபட்டார். இதனிடையே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்குஷ் பேஸ்புக் மூலம் தனது சகோதரனை அடையாளம் கண்டு கொண்டார். தன்னுடைய முகத்தில் இருந்த காயத்தை வைத்து தான் யார் என்பதை அடையாளம் கூறினார். இதனையடுத்து அவருடைய குரு லூதியானாவில் இருந்து புனே செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.
வீட்டிற்கு வந்த அங்குஷ் தனது உறவினர்கள், சொந்தங்களைக் கண்டு ஆனந்த கண்ணீர் விடுத்தார். ஆனால் அவர் சீக்கியர் தோற்றத்தில் இருந்த காரணத்தினால் யாரலும் அவரை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தன்னுடைய காயத்தை காண்பித்தார். சில நிகழ்வுகளை நினைவு படுத்தவே மகனைக் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார் ஹேமலதா.
வீட்டை விட்டு ஓடிப்போன தனக்கு நல்வழி காட்டிய குருவிற்கு நன்றி தெரிவித்த அங்குஷ் தற்போது புனேவிலேயே தங்கிவிட்டார். காணாமல் போன மகன் பேஸ்புக் மூலம் தன்னைத் தேடி வந்தது கண்டு மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார் அந்தத் தாய். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: