செவ்வாய், 30 ஜூலை, 2013

பாஜக வியூகம்: தேமுதிக, மதிமுக, பாமகவை இணைத்து கூட்டணி !

சென்னை: அடுத்தடுத்து வெளிவரும் கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சியை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஒருவலுவான கூட்டணிக்கான வியூகம் வகுப்பதிலும் பாஜக மும்முரம் காட்டுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் அதிமுக அணியில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. திமுக அணியில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. கருத்து கணிப்பு எதிரொலி- தேமுதிக, மதிமுக, பாமகவை இணைத்து கூட்டணி- பாஜக வியூகம்!! தேமுதிகவோ அதிமுக அணியில் இணையவே வாய்ப்பில்லை. திமுக அணியில் இணைவதற்கான வாய்ப்பு ராஜ்யசபா தேர்தலில் போது இருந்தது. ஆனால் அதை தேமுதிக புறக்கணித்துவிட்டதால் இப்பொழுது அதிமுக- திமுக இரண்டையும் நாட முடியாத நிலையில் இருக்கிறது. மதிமுகவைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அதிமுக அணி பக்கம் போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் உறுதியாக சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் நிச்சயம் திமுக அணியில் மதிமுக இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்ல முடியும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில் திமுக- அதிமுக இரண்டு அணியிலும் இணைய முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது.ப்ளீஸ் சீக்கிரம் கூட்டணி கட்டுங்க சைடு எபெக்ட் ரொம்ப நல்லது
இந்நிலையில்தான் தி ஹிண்டு- சி.என்.என். கருத்துக் கணிப்பு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 10% வாக்குகள் கிடைக்கும் என்று புது தெம்பை ஊட்டி வைத்தது. இதேபோல் தி ஹிண்டு மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளின் கருத்து கணிப்புகளில் மத்தியில் கணிசமான இடங்களைப் பாஜக பெறும் என்று கூறப்பட்டுள்ளதும் இன்னொரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் தற்போது அதிமுக - திமுக அணிக்குப் போக முடியாத கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி தேமுதிகவும் கூட, மத்தியில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்ற நிலையில் தூதர்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதை பாஜகவின் மாநில மூத்த தலைவர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார். முதல் கட்டமாக பாரதிய ஜனதா -தேமுதிக கூட்டணி உருவானால் அடுத்த கட்டமாக பாஜகவின் முன்னாள் தோழமைக் கட்சியான மதிமுகவை வளைத்துப் போடுவதுதான் டார்கெட்டாம். ஏனெனில் வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர்தான் பிரசார பீரங்கி. அந்த சொத்தை எப்படியும் இழுத்துவிட வேண்டும் என்பதற்கான மூவ்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இதற்காக டெல்லி பாரதிய ஜனதா தலைவர்கள் வைகோவுடன் மும்முரமாக பேசிவருகின்றனராம். பாஜக- தேமுதிக- மதிமுக இணையும் நிலையில் திமுக- அதிமுக அணிக்கு போகாத பாட்டாளி மக்கள் கட்சிக்கும் வலை வீசப்படுமாம். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும் கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையில் பாரதிய ஜனதாவுடன் மட்டும் தொகுதி உடன்பாட்டை பாமக மேற்கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேறுசில சாதி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தமிழக அரசியல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி ஒரு சவால்விடக் கூடிய கூட்டணியை உருவாக்க இருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: