ஹைதராபாத் இந்தியாவின் 29வது மாநிலம் தெலுங்கானா என்பது தெரியும். ஆனால்
தெலுங்கானாவைப் பற்றிய பல முக்கியமான விஷயங்கள் நிறையப் பேருக்குத்
தெரிந்திருக்காது.
ஒட்டுமொத்த ஆந்திராவையும் எடுத்துக் கொண்டால், தெலுங்கானா பிராந்தியத்தால்தான் அது வளமானதாக காணப்படுகிறது என்பதே உண்மை.ஆனால்
ஆட்சி அதிகாரத்திலும், வேலைவாய்ப்பு, கல்வியிலும் தெலுங்கானா பிராந்திய
மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதனால்தான் அவர்கள் தனி
மாநில கோரிக்கையையே கையில் எடுக்க நேரிட்டது.
தெலுங்கானா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.
நீர்வளம் நிரம்பிய தெலுங்கானா தெலுங்கானா பிராந்தியத்தில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய இரு ஆறுகளும் வளம் கொழிக்க வைக்கின்றன. இதில் கிருஷ்ணாவின் பங்கு 68 சதவீதமாகும். 69 சதவீத அளவுக்கு கோதாவரி ஆறு இப்பகுதியில் ஓடுகிறது. பாதி வனப்பகுதி இங்குதான் ஆந்திர மாநிலத்தின் ஒட்டுமொத்த வனப்பகுதியில், 45 சதவீதம் தெலுங்கானாவிலத்தான் அமைந்துள்ளது.
நிலக்கரியும் ஏராளம் நாட்டின் மொத்த நிலக்கரி இருப்பில் 20 சதவீதம் தெலுங்கானா பகுதியில்தான் உள்ளது.
பாதி வருவாய் தெலுங்கானாதான் தருகிறது ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 50 சதவீதம் தெலுங்கானாவிலிருந்துதான் கிடைக்கிறது.
மக்கள் தொகையிலும் பாதி இங்குதான் ஆந்திர மாநில மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் இந்தப் பகுதியில்தான் உள்ளனர்.
இந்துக்கள் அதிகம் தெலுங்கானா பகுதியில் 85.9 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். முஸ்லீம்களின் எண்ணிக்கை 12.4 சதவீதமாகும். கிறிஸ்தவர்கள் 1.2 சதவீதம் பேர். மற்றவர்கள் 0.4 சதவீதம் உள்ளனர்.
17 லோக்சபா சீட்கள் தெலுங்கானா பகுதியில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன
சட்டசபைத் தொகுதிகள் 119 இங்குள்ள சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 119 ஆகும்.
பாதிப் பரப்பளவு இங்குதான் ஒட்டுமொத்த ஆந்திராவின் பரப்பளவில் 42 சதவீதம் தெலுங்கானாவில்தான் உள்ளது. அதாவது 1,14,840 சதுர கிலோமீட்டர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக