: சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 இதையடுத்து,
சூதாட்ட உலகின் முக்கிய புள்ளிகளான, பிரசாந்த், சஞ்சய் பாவ்னா, கிட்டி (எ)
உத்தம் சந்த் ஆகியோரை, தேடி வந்தனர். அவர்களின் வீட்டில், கடந்த, இரு
தினங்களாக சோதனையிட்டனர். சோதனையின் இடையில், பிரசாந்தை, சி.பி.சி.ஐ.டி.,
போலீசார் கைது செய்தனர்.மூவர் வீட்டில் இருந்தும், லட்சக்கணக்கான ரூபாய்
பணம், கம்ப்யூட்டர்கள், சிம் கார்டுகள், ரசீதுகள், கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கைது
செய்யப்பட்ட பிரசாந்தை, நேற்று முன்தினம் இரவு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.முன்னதாக, ஏற்கனவே
கைது செய்யப்பட்ட, ஹரிஷ் பஜாஜ், லக்கி (எ) நர்பத் ஜெயின், பப்பு (எ)
பிரவீண் குமார் மற்றும் விருத்தாசலம் ஆகிய நால்வரையும், மூன்று நாட்கள்
விசாரிக்க, கோர்ட் உத்தரவை பெற்று, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு கொண்டு
வந்தனர்.
சூதாட்டம் நடந்தது எப்படி?
அவர்களிடம், நேற்று முன்தினம் இரவு முதல், விசாரணை துவக்கப்பட்டது. நள்ளிரவிலும் நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூதாட்ட கும்பலுக்கு, நேரடியாக வீரர்களுடனோ, அணிகளுடனோ தொடர்பு கிடையாது.டில்லி, மும்பையில் உள்ள சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு வைத்து, அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று, இங்கு சூதாட்டம் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சூதாட்டத்தில், சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, முக்கிய பிரமுகர்கள், கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள வசதி படைத்தவர்கள், வட மாநிலத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பணம் கட்டி, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
ரூ.400 கோடி புழக்கம்
இந்த சூதாட்டம் மூலம், பிரசாந்த் உள்ளிட்டவர்கள், 400 கோடி ரூபாய் வரை பணம் பெற்றிருப்பதாக, விசாரணையின் போது தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தொகை, டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புரோக்கர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு, தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சி.பி.சி.ஐ.டி., எச்சரிக்கை
இதற்கிடையில், சூதாட்ட வழக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சி.பி.சி.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த வழக்கு, சரியான பாதையில் முன்னேறி செல்கிறது. மோசடியாகவும், தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியும், மக்களை ஏமாற்றிய அனைத்து, "புக்கி'களும் கைது செய்யப்படுவர். இதுவரை, கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஹரிஷ் பஜாஜ், விருத்தாசலம், லக்கி, பப்பு ஆகிய நால்வரும், போலீஸ் விசாரணைக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மற்றவர்களும் விரைவில் விசாரிக்கப்படுவர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள், சரியான சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உள்ளன. விசாரணையின் போது, தேவைப்பட்டால், மற்ற ஐ.பி.சி., பிரிவுகள் மற்றும் சிறப்பு சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்படும்.
மிக முக்கியமான, "புக்கி'யான, உத்தம் சந்தை பிடிக்க, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டி உபயோகப்படுத்திய, 'சிம்' கார்டுகள் அனைத்தும், தவறான தகவல்களை கொண்டு பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.மோசடியான முறையில் சிம் கார்டுகள் பெறப்பட்டிருந்தால், அந்த குற்றத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் தப்புவதற்கு உதவி செய்யும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிட்டி வெளிநாடுகளுக்கு தப்பாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காவலில் எடுக்க மனு
இதற்கிடையில், நேற்று முன்தினம், கைது செய்யப்பட்ட, சூதாட்ட புள்ளி பிரசாந்தை, ஐந்து நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி கோரி, சைதாப்பேட்டை கோர்ட்டில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான, விசாரணை இன்று நடக்கிறது.
கோடி ரூபாய்க்கு மேல் லாபம் அடைந்துள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள புரோக்கரை பிடிக்க, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, டில்லி போலீசாரால், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள், ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையிலும், சூதாட்டம் நடந்துள்ளது கண்டறியப்பட்டது."கியூ' பிரிவு போலீசார், வேறு ஒரு வழக்கில், ஒருவரை விசாரிக்கச் சென்றனர். அங்கு பணத்துடன் வந்த மீரான் என்பவரிடம் விசாரிக்கும்போது, சென்னையிலும் சூதாட்டம் நடந்திருப்பதை அறிந்து, சி.பி.சி.ஐ,டி., போலீசார் களத்தில் இறங்கினர். தொடர்ந்து, சூளைமேட்டைச் சேர்ந்த, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, ஆறு பேரை கைது செய்தனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக