வியாழன், 23 மே, 2013

திருப்பதி ! புதிதாக ஒரு வரி! மக்களை சுரண்ட கோவில் நிர்வாகம் தீர்மானம்

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக
திருப்பதியில் இருந்து, அலிபிரி வழியாக திருமலைக்கு கொண்டு செல்லும் அனைத்து பொருட்கள் மீதும், இவ்வரியை விதிக்கதேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அலிபிரியில் உள்ளசோதனைச் சாவடியில், இந்த வரி வசூலிக்கப்படும். திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மீதும், திருமலையில் விற்பனை செய்ய வியாபாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் மீதும், இந்த வரி விதிக்கப்பட உள்ளது.
பாலுக்கு விதிக்கப்பட்ட முதல் வரி
திருமலைக்கு வரும் பொருட்கள் மீது வரி விதிக்கும் எண்ணம், தேவஸ்தானத்திற்கு, 1987ம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், அந்த காலகட்டத்தில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த எண்ணம் கைவிடப்பட்டது. பின், 2004ம் ஆண்டு பால் பாக்கெட் மீது வரி விதிக்கப்பட்டது. ஒரு பால் பாக்கெட்டுக்கு, 50 பைசா வரி செலுத்த வேண்டும். தேவஸ்தானம், 50 பைசா வரி விதித்தால், வியாபாரிகள் அதற்கு மேல், 50 பைசா வைத்து, ஒரு ரூபாய் உயர்த்தி, பால் பாக்கெட்களை விற்பனை செய்தனர்.
குடிநீர் முதல் சமையல் காஸ் வரை வரி வரி வரி மதம் மாறிய ரெட்டிகள்/கவுட்'கள் செய்யும் கீழ்த்தரமான செயல் இது, ஏற்கனவே மொட்டை அடிக்கும் இடத்தில் எல்லோரும் காணும் வகையில் சிலுவை அணிந்து கொண்டு மொட்டை அடிப்பவர் வந்ததால் கிளம்பிய சர்ச்சை மூடி மறைக்க பட்டது, இப்போது இது போன்றதொரு முயற்சி. 60 விழுக்காடு திருப்பதி மக்கள் மதம் மாறி விட்டனர் என்றவொரு தகவல் பத்திரிகைகளால் ஏன் உண்மையை வெளியே விட முடியவில்லை ?

தற்போது, திருமலைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் மீது வரி விதிக்க, திருப்பதி தேவஸ்தானம் ஒரு குழுவை நியமித்துள்ளது. அக்குழு, பல வகையில் ஆராய்ந்து, ஒரு அறிக்கையை தேவஸ்தானத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் மீது, 1 ரூபாயும், இரண்டு லிட்டர் பாட்டில் மீது, 2 ரூபாயும் வரி விதிக்கப்படும். திருமலையில் தினசரி, 8,000 லிட்டர் தண்ணீர் விற்கப்படுகிறது.இதுதவிர, 200 மி.லி., 300 மி.லி., குளிர் பானங்கள் மீது, 1 ரூபாயும், 500 மி.லி., குளிர் பானம் மீது, 2 ரூபாயும், அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட குளிர்பானங் களுக்கு, 3 ரூபாயும் வரி விதிக்கப்படும். ஐஸ்கிரீம் மீதும், இந்த வரி விதிக்கப்படுகிறது. 50 மி.லி.,க்கு 50 பைசா; 100 மி.லி., க்கு 1 ரூபாய்; அதற்கு மேல் உள்ள எவ்வளவு மி.லி., இருந்தாலும், 3 ரூபாயும் வரி விதிக்கப்படும். பிஸ்கட், சாக்லேட் என, அனைத்து பொருளின் மீதும் வரி விதிக்கப்படு கிறது. ஓட்டல்களில் சமையலுக்கு தேவைப்படும், சிறிய சமையல் காஸ் சிலிண்டர் மீது, 5 ரூபாயும், வணிக சிலிண்டருக்கு, 15 ரூபாயும் வரி விதிக்கப்படுகிறது. தெய்வப் படங்கள், பொம்மைகள், குறுந்தகடு, ஒலிநாடாக்கள் போன்ற பொருட்களை விற்பவர்களின் வியாபாரத்தைப் பொறுத்து, மாதம் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை வரி விதிக்கப்படும்.
உண்டியல் வசூல் தினசரி ரூ.2கோடி
திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமலையில் உள்ள வியாபாரிகள், பக்தர்களின்தோற்றத்தை பார்த்து, பொருட்களின் விலையை கூட்டியும், குறைத்தும் விற்பனை செய்கின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, வியாபாரிகள் சொல்வது தான் விலை.இந்த சூழ்நிலையில், திருப்பதிதேவஸ்தானம், புதிய வரியை விதித்தால், திருமலைக்கு வரும் பக்தர்கள், மிகவும் சிரமப்படுவர். தேவஸ்தானத்தின் இச்செய்கை, வியாபாரிகள், பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க, அனுமதி வழங்கியது போல் உள்ளது. இந்த புதிய வரி விதிப்பின் மூலம், தேவஸ்தானத்திற்கு மாதத்திற்கு, 50 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை, கூடுதலாக வருமானம் வர வாய்ப்புள்ளது. நாள் ஒன்றுக்கு, உண்டியல் காணிக்கை மூலம், 2 கோடி ரூபாய் கிடைக்கும் நிலையில், மாதத்திற்கு, 1 கோடி ரூபாய் வருமானத்திற்காக, புதிய வரி விதிப்பு என்ற நடவடிக்கையை தேவஸ்தானம்மேற்கொள்வது, பக்தர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமர்ப்பிக்கும் தொகை, தினசரி, 2 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது போதாது என்று, திருப்பதி தேவஸ்தானம், புதிதாக ஒரு வரியை விதிக்க உள்ளது. இது, " ஏழுமலையான் வரி' என்று அழைக்கப்பட உள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை: