வெள்ளி, 24 மே, 2013

அம்பானிகளுக்கு கூடுதலாக 1,62,000 கோடி அரசின் எரிவாயு விலை ஏற்றத்தால் கிடைத்துள்ளது

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக எரிவாயு விலை உயர்வா? வீரப்ப மொய்லி மறுப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில், அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதாக மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார். < கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.1,80,000 கோடி மத்திய அரசின் கூடுதல் மானிய செலவால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ.1,62,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது பெட்ரோலிய துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் மிகப் பிரம்மாண்ட ஊழல் என்றும் குருதாஸ் தாஸ்குப்தா குறிப்பிட்டார் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மறுத்துள்ளார். இந்த விலை உயர்வு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: