கொடைக்கானல்: ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டதற்காக இந்திய கிரிக்கெட்
கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனான குருநாத்
மெய்யப்பன் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் பாலிவுட் நடிகர் வின்து தாராசிங் கைது
செய்யப்பட்டார். அவரது செல்போன் அழைப்புகளில் சென்னை எண் ஒன்றுக்கு பலமுறை
தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது. அந்த எண் யாருடையது? என்று
மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லைமை
செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான
சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனின் எண் எனத் தெரியவந்தது.
திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியத்தின் மகன்தான் இந்த
குருநாத் மெய்யப்பன். அவரை விசாரிப்பதற்காக மும்பை போலீசார் 4 பேர் நேற்று
சென்னை வந்தனர். சென்னை போலீசார் உதவியுடன் செனடாப் சாலையில் உள்ள குருநாத்
வீட்டல் போலீசார் விசரணை நடத்தினர. ஆனால் குருநாத் வீட்டில் இல்லை. இதனால்
அவரது உதவியாளரிடம் குருநாத் ஆஜராக வேண்டும் என்பதற்கான சம்மன்
கொடுக்கப்பட்டது.
கால அவகாசம் நிராகரிப்பு
இதைத் தொடர்ந்து தாம் வெளியூரில் குடும்பத்தினருடன் இருப்பதால் ஆஜராக கால
அவகாசம் வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை
மும்பை போலீஸ் நிராகரித்தது. அவர் இன்று மாலை 5 மணிக்ுள் ஆஜராகவில்லை எனில்
அவருக்ு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் மும்பை போலீஸ்
வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதனால் அவர் இன்று ஆஜராக வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது
கொடைக்கானல்- மும்பை பயணம்
அவர் தமது மாமனார் சீனிவாசனுடன் கொடைக்கானலில் தங்கியிருக்கலாம் என்று
தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் கொடைக்கானலில் தமது மாமனார்
சீனிவாசனுடன் இருந்தது உறதி செய்யப்பட்டது. அவர் அங்கிருந்து மதுரைக்கு
காரில் சென்று பின்னர் விமானம் மூலம் மும்பை சென்றார். மாலை 5 மணிக்குள்
ஆஜராக வேண்டும் என்றுபோலீசார் கூறியிருந்தார். இருப்பினும் மாலை 5 மணி
விமானத்தில்தான் கிளம்பினார். இதனால் இரவு 7 மணிக்குத்தான் குருநாத்
மெய்யப்பன் மும்பை சென்றடைந்தார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மும்பை
விமான நிலையத்தில் இருந்து அவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார.
குருநாத் கைது
சில மணி நேர விசாரணைக்குப் பின்னர் குருநாத் கைது ஐபிஎல் பெட்டிங்கில்
ஈடுபட்டதற்காக குருநாத் கைது செய்யப்பட்டதாக மும்பை போலீசார் அறிவித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை கிரைம் பிரிவு இணை கமிஷனர்
ஹிமன்சு ராய், எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநாத்திடம்
விசாரணை நடத்தினோம். ஐபிஎல் பெட்டிங்கில் அவர் ஈடுபட்டது உறுதி ெய்யபட்டது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்திருக்கிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம்
கூறினார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக