புதன், 22 மே, 2013

ஜெயாவின் மற்றுமொரு அநியாயம் 20000 TVக்கள் நாசம் ! சிஏஜி அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா மூழ்கடித்த மற்று மொரு நல்ல திட்டம் இலவச தொலைகாட்சி திட்டம் , பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய   20 ஆயிரம் தொலைக்காட்சிகள் பேட்டிகள் மழையும் வெய்யிலும் பட்டு நாசமாயிற்று , மக்களின் வரிப்பணத்தில் விளையாடும் ஜெயலிலதா .
சிஏஜி அறிக்கை சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் தொலைக்காட்சிகள் குடோன்களிலேயே கிடப்பில் போடப்பட்டதால் ரூ4 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய கணக்கு தணிக்கை குற்றம்சாட்டியுள்ளது. திமுக ஆட்சிக்கால இலவச திட்டங்களில் வண்ண தொலைக்காட்சி வழங்குதலும் முக்கியமானது. இதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் 1.65 கோடி தொலைக்காட்சிகள் ரூ3,907 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டன. இது 6 கட்டங்களாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ரூ22. 82 கோடி மதிப்பிலான 95,725 தொலைக்காட்சிகள் வெவ்வேறு குடோன்களில் 16 முதல் 29 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தன. இவை கடைசி கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய கணக்கு தணிக்கைத் துறை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. ஆனால் டிசம்பர் மாதம் வரை தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் தணிக்கை துறைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இப்படி குடோன்களில் வைக்கப்பட்டவற்றில் 20,106 தொலைக்காட்சிகள் முற்றாக சேதமடைந்து செயலிழந்துவிட்டன. குடோன்கள் மேற்கூரை வழியே மழை நீர் உள்ளே புகுந்ததாலும், எலி போன்றவை தொலைக்காட்சிகளின் முக்கிய பாகங்களை கடித்து குதறியதாலும் இந்த தொலைக்காட்சிகள் செயல் இழந்துவிட்டன. இதனால் தமிழக அரசுக்கு ரூ4 கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: