புதுடில்லி:"பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின்
கன்னித்தன்மையை ஆராய மேற்கொள்ளப்படும் சோதனைக்கு, கை விரல்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்; வேறு விதமான மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனைகள், பழமையான முறையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளாரா? அவரின் பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை, கிழிந்துள்ளதா என, சோதனை செய்ய, இரு விரல்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.இத்தகைய சோதனையால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மேலும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு வெட்கமும், வேதனையும் உண்டாவதால், இரு விரல் சோதனையை தடை செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, நீதிபதிகள், பி.எஸ்.சவுகான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் உண்மை நிலை மற்றும் கன்னித்தன்மையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும், இரு விரல் சோதனை, சந்தேகமே இல்லாமல், அந்தப் பெண்ணின் தனித்தன்மைக்கும், உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பெண்ணின் மரியாதையை சீர்குலைக்கும், அத்தகைய சோதனை கைவிடப்பட வேண்டும்.
மருத்துவ அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில், இது போன்ற முறையில் நடத்தப்படும் சோதனைகள், ஆய்வுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை மேலும் தீவிரமாக்குகின்றன. சோதனை மற்றும் அதன் முடிவுகள், நேர்மறையாக இருந்தாலும், சோதனையால் அந்தப் பெண் அனுபவிக்கும் வேதனை, அதிகமாகத் தான் இருக்கும். எனவே, மாற்று வழிகள், சோதனை முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக