நகைச்சுவை
நடிகர் வடிவேலு தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த காமெடி நடிகர். அவர்
ஹீரோவாக நடித்த ’இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படமும் சூப்பர் ஹிட்டாகி
வடிவேலுவை ஹீரோவாக மாற்றியது. ஹீரோவாகவும், காமெடியனாகவும் தமிழ்த்
திரையுலகத்தில் தனக்கென ஒரு இடத்தை அடைந்திருந்தார் வடிவேலு.
தமிழ்த்
திரையுலகில் முன்னணி காமெடியனாக இருந்த சமயத்தில் நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பாக அ.தி.மு.க கட்சிக்கு எதிராக
பிரச்சாரம் செய்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று
ஆட்சியைப் பிடித்தது. ஆளும்கட்சிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்ததால்
திரையுலகினர் பலரும், இவரை நடிக்க வைத்தால் தமக்கு ஏதேனும் பிரச்சனை வந்து
விடுமோ என்று வடிவேலுவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க தயங்கினர். தி.மு.க
தலைவர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் சொந்த படங்களிலும் கூட
வடிவேலுவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.திரையுலகில்
மார்கெட் இல்லாத போது சம்பளத்தை குறைத்து வாங்குவது திரையுலகில் வழக்கமான
ஒன்று. வாய்ப்புகள் இல்லாத போதிலும் தனது சம்பளத்தை உயர்த்தியே
கேட்டுக்கொண்டிருந்தார் வடிவேலு. மார்கெட் இல்லாத சமயத்தில் பல பிரச்சனைகளை
சந்திக்கக் கூடும் என்று தெரிந்திருந்தும் இவரை நடிக்கக் கேட்டால் இவ்வளவு
சம்பளம் கேட்கிறாரே? என வடிவேலுவை சந்தித்தவர்கள் புலம்பியது அவரது
காதுக்கு கேட்டதோ என்னவோ, தன்னிலை உணர்ந்து கதை சொல்ல வருபவர்களிடம்
இப்போது சம்பளத்தை குறைத்து கேட்கிறேராம்.இதன்
பயனாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு
ஒப்பந்தமாகியுள்ளார். ’போட்டா போட்டி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர்
யுவராஜா தான் வடிவேலு நடிக்கும் இந்த படத்திற்கு இயக்குனர். யுவராஜா
தற்போது விதார்த் நடிப்பில் ‘நாகேஷ்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருப்பதால்,
இந்த படம் முடிந்ததும் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு
துவங்கும் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக