புதன், 6 பிப்ரவரி, 2013

கடலூர் : சிறுவனை கடத்திக்கொன்றவருக்கு மரண தண்டனை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் சரஸ்வதி, 15, சுகன்யா, 14 , சூர்யா, 11, மற்றும் மகன் சுரேஷ், 7, ஆகி‌யோருடன் கிராமத்தில் வசித்து வந்தார்.சிறுவன் சுரேஷ் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த, 2009ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த நபர், சுரேஷை கடத்திச் சென்றார். பின், அன்று இரவு மகேஸ்வரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஐந்து லட்சம் பணம் கொடுத்தால் சுரேஷை விடுவிப்பதாகவும், போலீசில் கூறினால் குழந்தையைக் கொலை செய்து விடுவேன் என, மிரட்டினார்.போலீஸ் விசாரணையில், மகேஸ்வரியின் தூரத்து உறவினரான கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி மனைவி பாலாயி, 34, இவரது கள்ளக் காதலன் திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் சுந்தர் (எ) சுந்தர்ராஜன், 25, ஆகிய இருவரும் சிறுவன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.


இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.பாலாயியின் கள்ளக்காதல் விவகாரம் அம்பல மானதால் அவரது கணவர் புகழேந்தி வீட்டை விட்டு விரட்டி விட்டார். அதனால், பாலாயியியும், சுந்தரும் சேர்ந்து, குடும்பம் நடத்த பணம் தேவைப்பட்டதால், மகேஸ்வரியின் மகன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதும், விஷயம் போலீசாருக்கு தெரிந்து விட்டதால், சிறுவன் சுரேஷை கழுத்தை நெறித்துக் கொலை செய்து சாக்கில் கட்டி, பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி மீன்றான் குளத்தில் வீசியதையும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, இருவர் மீதும் விருத்தாசலம் போலீசார், கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன், குற்றம்சாட்டப்பட்ட சுந்தருக்கு, இரட்டை மரண தண்டனை விதித்தார். பாலாயி விடுதலை செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து, சுந்தர், சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இருப்பினும், கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பை, ஐகோர்ட் உறுதிபடுத்தியது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கடந்த, 2011ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி முறையீடு செய்தார்.வழக்கை விசாரித்த ”ப்ரீம் கோர்ட், கீழ் ‌கோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்ததோடு, தண்டனையை நிறை‌வேற்றும் ‌தேதியை, கடலூர் மகிளா கோர்ட்டே முடிவு செய்யலாம் என, நேற்று தீர்ப்பு கூறியது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: