மாலிவுட்டிலிருந்து வந்து கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் என ஒரு பட்டியல் போடலாம். ஆனால் இந்த பட்டியலில் இருந்து தவறிப்போய் மற்ற எல்லா மொழி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை வித்யாபாலன்.பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் படங்களை தொடர்ந்து தவிர்த்து வந்தார் வித்யாபாலன்.
காரணம் இல்லாமலா இருக்கும். எல்லாம் பேசி முடித்த பின் வேறு ஹீரோயினை வைத்து படப்பிடிப்பு நடத்தியது, சில காட்சிகள் நடித்த பின் வித்யாபாலனை மாற்றியது என கோலிவிட்டிற்கும், வித்யாபாலனுக்கும் பேசித் தீர்க்க முடியாத கணக்கு நிறையவே உள்ளது.இதைக் காரணமாகக் கொண்டு தான் தமிழக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடிக்கவே முடியாது என மறுத்து மணவாழ்க்கைக்குள் புகுந்துவிட்டார் வித்யாபாலன். இதே போல் ஒரு மாலிவுட் இறக்குமதியான சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், பட்டியல் ஆகிய படங்களில் நடித்த பத்மப்ரியாவையும் உருவாக்கிகொண்டு வருகிறதாம் கோலிவுட்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பத்மப்ரியா “ நான் நடித்த படங்கள் நல்ல ரிசல்ட் கொடுத்திருந்தும், தமிழ் சினிமா என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. என் திறமைகளை கண்டுகொள்ளவில்லை. நான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிப்பவள் என்பது தெரிந்திருந்தும் என்னைப் பற்றி மறந்துவிட்டது” என்று கூறியுள்ளார். மாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துவிட்ட பத்மப்ரியா இந்தி படங்களிலும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக