மலாலாவின்
தலையில் ஏற்பட்ட காயங்களுக்கான 2 ஆபரேஷன்கள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக
நடத்தப்பட்டதாக ராணி எலிசபத் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.
தலிபான்களால் மலாலா கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்து முடிந்து சுமார் 5
மாதங்கள் ஆகின்றன. இதுவரை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறும்
புகைப்படங்களும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய புகைப்படங்களும் மட்டுமே
வெளியாகியுள்ளன. இந்நிலையில், முதன் முதலாக மலாலா வீடியோ மூலம் பேசிய
காட்சி நேற்று ஒளிபரப்பட்டது.கீழ் உதட்டுடன் மேல் உதடு சரியாக பொருந்தாத நிலையில் சிரமப்பட்டு தெளிவாக பேசிய மலாலா கூறியதாவது:- இன்று
என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நான் நலமடைந்து
வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம்,
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த
பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய
வாழ்க்கையை தந்துள்ளார்.இது
என்னுடைய இரண்டாவது வாழ்க்கை இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு
சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும்
கல்வியறவை பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.இதற்காக
மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். கடந்த ஆண்டு
ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53
கோடி நிதி சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக