சனி, 9 பிப்ரவரி, 2013

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு

2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து நீதிபதி எஸ்.எம்.திங்கா தலைமையில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. 2004ல் அப்சல் குரு குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட 2006 அக்டோபர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்சல் குரு குருணை மனு தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்சல் குருவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதையடுத்து ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அப்சல் குருவின் சொந்த ஊரான காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: