சனி, 5 ஜனவரி, 2013

அழகிரி கோபாலபுரம் வர.. கருணாநிதி சி.ஐ.டி. காலனிக்கு போக..

 அழகிரியை திமுகாவில்  யார் கவிழ்க்க நினைக்கிறார்களோ சரியாக தெரியவில்லை ஆனால் ஜெயலலிதா நிச்சயம் அழகிரியை எப்படியாவது அட்ரஸ் இல்லாமல் செய்துவிட முடியாதா என்று ஏங்குகிறார். அழகிரியின்  பலம் அம்மாவுக்கு  தெரியும் 
Viruvirupu
மு.க.ஸ்டாலின்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவர் என்று கருணாநிதி மறைமுகமாக பேசிய பேச்சால் கொதித்துப்போன மு.க.அழகிரி, நீதி கேட்டு நெடும் விமானப் பயணமாக மதுரையில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அஞ்சாநெஞ்சர் வந்த வேகத்திலேயே, “தி.மு.க. ஒன்றும் மடம் அல்ல” என்று கூறி அசத்தினார்.
அதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிரமபரிகாரம் செய்துகொண்ட மு.க.அழகிரி, வந்த அலுவலை கவனிக்க கிளம்பினார். அப்போது தொடங்கியது கண்ணாமூச்சி.
கருணாநிதியைச் சந்திக்க கிளம்பிய அஞ்சாநெஞ்சர், கோபாலபுரம் வீட்டுக்கு காலை 10 மணிக்கு செல்லத் திட்டமிட்டார். அண்ணன் வரும் விஷயம் எப்படியோ ‘காற்றுவாக்கில்’ தலைவரின் காதுகளுக்கு போய்விட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு அறிவாலயத்துக்குச் சென்று, அங்கிருந்து நேரடியாக சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்று விட்டார். அழகிரி கோபாலபுரத்தில் இருந்து கிளம்பிவிட்ட சேதி கிடைத்ததும், மீண்டும் கோபாலபுரம் வந்தார்.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத அஞ்சாநெஞ்சர், மீண்டும் காரைப் போட்டுக்கொண்டு மாலையில் கோபாலபுரம் சென்றார்.
பிள்ளை எட்டடி பாய்ந்தால், தந்தை 16 அடி பாய மாட்டாரா?

அழகிரி செகன்ட் இன்னிங்ஸ் விளையாட வருகிறார் என்ற தகவலும் ‘காற்றுவாக்கில்’ தலைவரின் காதுகளுக்கு போய்விட்டது. அவர் வருவதற்கு முன்னே புறப்பட்டு அண்ணாநகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அன்பழகனோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
கோபாலபுரம் வீட்டில் தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, மு.க.அழகிரி மட்டும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அழகிரி தன் ஆதங்கத்தை தயாளு அம்மாளிடம் தெரிவித்துவிட்டு, கருணாநிதி தம்மை சந்திக்காதது பற்றியும் குமுறிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: