வியாழன், 3 ஜனவரி, 2013

Admk நாஞ்சில் சம்பத் அவதூறு வழக்குகள் வாபஸ்


கடந்த 201.01.2003 மற்றும் 21.01.2003 ஆகிய தேதிகளில் சென்னை தம்பு செட்டி தெரு வேப்பேரி தானாதெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கைதை கண்டித்து நாஞ்சில் சம்பத் பேசினார். இதேபோன்று 17.4.2004 அன்று வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து நாஞ்சில் சம்பத் பேசினார்.
இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது தமிழக அரசு 3 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தது. சென்னையில் உள்ள 4வது மற்றும் 7வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த 3 வழக்குகளையும் வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணைகளின் அடிப்படையில் சென்னை மாநகர அரசு வக்கீல் எம்எல் ஜெகன், நாஞ்சில் சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்க கேட்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 321ன் கீழ் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மூன்று மனுக்களும் முறையே 4வது மற்றும் 7வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் 02.01.2013ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், தற்போது அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ளார். சமீபத்தில் அதிமுக தலைமைக் கழகத்தில் நாஞ்சில் சம்பத்துககு இன்னோவா கார் ஒன்றையும் ஜெயலலிதா பரிசாக அளித்தார். அதிமுகவில் நாஞ்சில் சம்பத் இணைந்ததையடுத்தே அவர் மீதான வழக்கை அதிமுக தரப்பு வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. nakkheeran.in/

கருத்துகள் இல்லை: