கன்னியாக்குமரியில்
திருவள்ளுவர் சிலையை காக்க போராட்டம் நடத்துவது குறித்து யோசித்துக்
கொண்டிருப்பதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் 02.01.2013 அன்று செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.கேள்வி
: குமரி முனையிலே உள்ள திருவள்ளுவரின் சிலையினை இந்த அரசு சரியாகப்
பராமரிப்பதில்லை என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?கலைஞர்
: அதற்காக ஒரு போராட்டம் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
திருவள்ளுவர் சிலையை மாத்திரமல்ல. சென்னை மாநகரில் அண்ணா நூற்றாண்டு
நினைவு நூலகத்தையும் திட்டமிட்டுப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் நேரில் சென்று பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். அங்கே அமர்ந்து
படிப்பவர்களுக்கு எந்த வசதியும் இல்லையாம். கழிவறைகளும் அசிங்கமாக
இருக்கிறதாம், புத்தகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறதாம்.
இவ்வாறு கூறினார். nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக