சனி, 5 ஜனவரி, 2013

விரைவில் தெலுங்கானா மாநிலம் காங்., அறிவிப்பு?

புதுடில்லி: இன்னும் இரண்டு வார காலத்திற்குள் தெலுங்கானா மாநிலம் குறித்த ‌அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லியில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரியகமிட்டி கூட்டம்: புதுடில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தி்ல் சோனியா ஆலோசகர் அகமது படேல், அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, சுஷில்குமார் ஷிண்டே, சிதம்பரம், மற்றும் குலாம்நபி ஆசாத் உட்படபலர் கலந்து கொண்டனர். இதில் சமீபத்தில் ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தெலுங்கானா மாநிலம் அமைப்பது அல்லது டொமினயன் அந்தஸ்து வழங்குவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்நிலையி்ல் வரும் 7-ம் தேதி விஜயவாடாவில் காங்கிரஸ் கட்சி சார்பி்ல் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில தலைவர் தெலுங்கானா பிரச்னை வலுவாக உள்ள நிலையில் இம்மாநாடு தேவையில்லாதசிக்கலை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.


மேலும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்‌பூரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் மாநாட்டின்போது தெலுங்கானா விவகாரம் குறித்து பேசப்படும் என ஐதாராபாத்தில் தெலுங்கான பகுதி காங்கிரஸ் கட்சிதலைவர்கள் கூட்டத்தி்ல பேசிய ராஜ்யசபா எம்.பி., கோவர்தன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.

இதனிடையே தெலுங்கானா மாநிலம் உருவாவதை தவிர மக்கள் எந்த வித சமரசத்திற்கும் தயாராக இல்லலை எனவும் , மாநில அந்தஸ்திற்கு பதிலாக அதற்கு இணையாக மண்டல கவுன்சில் போன்ற அதிகாரங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஜனா ரெட்டி கூறியுள்ளார். தற்‌போதைய கூட்டத்தில் தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவான கருத்து வெளியிடப்படவில்லை எனில் ஒன்று பட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளதாகவும் ஜனாரெட்டி தெரிவித்துள்ளா dinamalar.com

கருத்துகள் இல்லை: