சென்னை: விஐபி பற்றிய வில்லங்க கதையில் மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார்
பாவனா. தமிழில் ‘சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமான பாவனா தொடர்ந்து
‘அசல், ‘தீபாவளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபல நடிகைகளின்
ஆதிக்கத்தாலும், புதுமுக ஹீரோயின்களின் அதிரடி வரவாலும் தமிழில் பட
வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தியவர்
தொடர்ந்து கன்னட படங்களில் நடித்தார். மாறி மாறி இந்த இருமொழி படங்களில்
மட்டுமே தற்போது நடித்து வருகிறார் பாவனா.
ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ‘எழமதே வரவு மலையாள படத்தில் நடித்து முடித்தார். இதையடுத்து ராஜேஷ் பி மேனன் இயக்கும் ‘எல்லோ என்ற படத்தில் நடிக்கும் பாவனா பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி வேடம் ஏற்கிறார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது,‘இப்படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்கிறார்கள். எல்லோ (மஞ்சள்) என்பது ஒரு சிலரின் ஒழுக்கமின்மையை குறிப்பதான சொல். இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொரு விஐபி கதாபாத்திரத்துக்கு பின்னாலும் சில ஒழுக்கமின்மை உள்ளடக்கி இருக்கிறது. எனவேதான் இந்த தலைப்பு வைக்கப்பட்டது. இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றார். tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக