தர்மபுரியைத் தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து தலித் மக்கள் மீதான
வன்கொடுமைத் தாக்குதலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பா.ம.க. தலைவர்
ராமதாசு தமிழகம் முழுவதும் ஆதிக்க சாதி சங்கங்களை ஒன்றிணைக்கும்
முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் 4.1.2013 அன்று திருச்சி, தஞ்சை, கரூர்
உள்ளிட்ட எட்டு மாவட்டப் பிரதிநிதிகள் கூட்டத்தை சொகுசு ஓட்டலான சங்கம்
ஓட்டலில் கூட்டி அவர்களை குளுப்பாட்டி சாதித் தீயை மூட்ட முயல்வதைக்
கேள்விப்பட்டோம். உடனே, திருச்சி பகுதி ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு,
பெ.வி.மு தோழர்கள் 3.1.2013 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து
சாதிவெறியர்கள் சங்க சதியாலோசனைக் கூட்டத்தைத் தடை செய்ய வலியுறுத்தச்
சென்றோம்.மாவட்ட ஆட்சியர் போட்டோவிற்குப் போஸ் கொடுக்க வெளியூர் சென்றதால் சப் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அது செவிடன் காதில் ஊதிய சங்கானது. எனவே, சாதிவெறியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நகரம் முழுவதும் 1000 விளக்கப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன; 300 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இன்று (4.1.2013) காலை 11 மணியளவில் திருச்சி எல்லையை ராமதாசு வந்தடைந்தார் என்பதை அறிந்ததும் மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு
- தலித் மக்களின் குடிகெடுக்கக்
கூட்டம் நடத்தும் கும்பலை
முற்றுகையிடுவோம்! முறியடிப்போம்!
- தடை செய்! தடை செய்!
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாகத் தடைசெய்!
- சாதி வெறியைத் தூண்டிவிடும்
பா.ம.க. ராமதாசை
கைது செய்! கைது செய்!
- தடை செய்! தடை செய்!
சாதி வெறியர்களின் சதியாலோசனைக் கூட்டத்தை
தடை செய்! தடை செய்!
- மோப்பம் பிடிக்கும் உளவுத் துறையே!
குடி கெடுக்கும் கூட்டத்தைக்
கைது செய்யாத மர்மம் என்ன?
பேரணியின் எதிரே ராமதாசை வரவேற்க சென்ற அவரது வானரப்படை காரை ஒரம்கட்டி பறந்துகொண்டிருந்த அவர்களது கொடியின் தடிக்கம்பை வேகமாக உருவினர். சரி, தாக்கத்தான் போகிறார்கள் என எதிர்பார்த்த வேளையில் கொடியை காலுக்கடியில் போட்டுகொண்டு அந்த சூரப்புலிகள் அய்யாவை வரவேற்கச் சென்றனர். எடுபிடிகளின் வீரம் போதை தலைக்கேறும்போது மட்டும்தான் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது.
நமது அமைப்புகளின் போராட்டம் முடிந்த சில நிமிடங்களில் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம், ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாயினர். இதே நோக்கத்திற்காக நீதிமன்றத்தில் திரண்ட விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியினரை அங்கேயே காவல் துறை கைது செய்ய எத்தனித்ததால் நீதி மன்றத்தின் எதிர்ப்புறம் சாலை மறியல் செய்து கைதாகினர்.
ராமதாசை உள்ளிட்ட கிரிமினல்களை வெளியில் திரியவிட்ட ஜெயா போலீசு, அதைத் தடுக்கப் போராடிய தோழர்கள், ஜனநாயக சக்திகளைக் கைது செய்ததைக் கண்டித்து உடனடியாக மீண்டும் 300 சுவரொட்டிகள் தயாரித்துப் நகர, புறநகர்ப் பேருந்துகள், மற்றும் பல இடங்களில் விரிவாக ஒட்டப்பட்டது.
ஒரு புறம் ராமதாசு உள்ளிட்டோர் சதியாலோசனைக் கூட்டம் நடக்க, மறுபுறம் கைதான தோழர்களை என்ன செய்யலாம் என காவல் துறை ஆலோசித்து வருகிறது. இந்த ஆலோசனையில் ராமதாசும் கலந்துகொண்டிருப்பாரோ? காலம்தான் வெளிக்கொணரும்.
இந்த போர்க்குணமான போராட்டம் உழைக்கும் மக்களிடையேயும் பிற தோழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தருமபுரி போல இங்கு மக்களைப் பிளந்து மோத விட்டு இரத்தம் குடிக்க இந்த ஓணாயால் முடியாது என்பதை உரைக்க வைப்பதாகவும் அமைந்தது. vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக