வியாழன், 17 மே, 2012

Malaysia கல்வியில் இந்தியர்களின் நிலை, படுமோசம்; படு வீழ்ச்சி!

படித்த வேலைகள் இனிமேல் இந்தியர்களுக்கு கிடைக்காது. புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு போட்டி போடும் அளவுக்கு தகுதி பெறும் மற்ற இனங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்தியர்ளை 56 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளதே அதற்குக் காரணம்.
2000-இல் வெளியிடப்பட்டு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின்படி கல்லூரி வரை கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மலாய்காரர்களிடையே 11.7 விழுக்காடும் சீனர்களிடையே 11.8 விழுக்காடும் இந்தியர்களிடையே 7.5 விழுக்காடுமாக உள்ளது. அதாவது இந்தியர்களைவிட மலாய்காரர்கள் 56 விழுக்காடு அதிகமாகவும் சீனர்கள் 57 விழுக்காடு அதிகமாகவும் உள்ளனர்.
அதாவது கல்லூரியில் கல்வி பயின்ற ஒவ்வொரு இந்தியருக்கும் ஈடாக 5 சீனர்களும் 11 மலாய்காரர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதேவேளையில் மக்கள் தொகையில் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் ஈடாக 3 சீனர்கள் 7 மலாய்காரர்கள் என்றே உள்ளனர்.

இந்த ஒப்பீட்டு வளர்ச்சியில் சீனர்களும் மலாய்க்காரர்களும் இந்தியர்களைவிட அதிகமாக வளர்ச்சியடைந்து உள்ள்னர். சிறுபான்மை சமூகமாக இருக்கும் இந்தியர்கள் மேலும் தொடர்ந்து பின்னடைவு கொண்ட சமூகமாகவே உருவாகுவார்கள். காரணம், இன அடிப்படையிலே இயங்கும் அரசாங்கமும், தனியார் வாணிப அமைப்புகளும் வலுக்கட்டாயமகவோ அனுதாபப்பட்டோ வேலை வாய்ப்புகளை இந்தியர்களுக்கு வழங்க மாட்டார்கள். அவை தேவை என்ற அடிப்படையில் அல்லது திறன் அடிப்படையிலே அல்லது பூமிபுத்ரா அடிபடையில் இருப்பதால் ஒரு இந்திய நபர் தேர்வு செய்ய பெற அவர் மற்ற இனங்களைவிட சிறந்த நிலையில் இருக்கவேண்டும், இயங்க வேண்டும். அப்படிப்பட்ட எண்ணிக்கை நம்மிடையே குறைவு.

இந்த இக்கட்டான சூழல் உருவாக முக்கிய காரணம், புதிய பொருளாதார திட்ட கொள்கை மற்றும் அதன் அமுலாக்கத்தில் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டதேயாகும். ஏழ்மை ஒழிப்பு மற்றும் இன அடிப்படையில் பணிகளும் பொருளாதாரமும் சீரமைக்கப்படவேண்டும் என்பதில் இந்தியர்கள் புறந்தள்ளப்பட்டனர்.

மேலும் அவர்களது வாய்ப்புகள் அபகரிக்கப்பட்டதாலும் பலவீனமான பொருளாதாரத்தை கொண்டிருந்ததாலும் அவர்களால் ஈடுகொடுக்க இயலவில்லை. நமது இந்த அவல நிலை நமக்கு திறனோ அல்லது அறிவோ இல்லை என்பதால் அல்ல, நாட்டின் கொள்கையில் புறந்தள்ளப்பட்டோம் என்பதால்தான்.

இந்த நிலைமையை சீரமைக்க அரசாங்க கொள்கை மாற்றமும் இந்தியர்களுக்கென விசேச வாய்ப்புக்களுக்கும் உடனடியாக உருவாக்கப்பட்டு அமுலாக்கபட வேண்டும். தற்போது இந்தியர்களுக்கு சுமார் 2.8 விழுக்காடு இடங்கள் மட்டுமே அரசாங்க உயர்கல்விக் கூடங்களிலும், தொழில் திறன் கல்லூரிகளிலும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக மறுபரிசீலனை செய்து அடித்த ஐந்து வருடங்களில் இந்நிலை மாற அராசங்கதிற்கு உடனடி நெருக்குதல் அளிக்க வேண்டும்
semparuthi.com,malaysia

கருத்துகள் இல்லை: