சனி, 19 மே, 2012

தண்டவாளத்தைக் கடக்கிறீர்களா? Camera....

சென்னை, மே 18-கணக்கு காட்டுவதற் காக, ரயில் பாதைகளை கடக்கும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎப்) ஒளிந்திருந்து பிடித்து அபராதம் விதிக்கின் றனர்.
ரயில்வேயில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற் றும் குற்ற வழக்குகளை விசாரிக்க அந்த மாநி லத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறையினர் ஈடு படுகின்றனர்.அதே நேரத்தில்ரயில்வே சொத்துக்களை பாது காக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர்.
கூடவே இவர்கள் ரயில்பா தையை கடப்பவர்கள், பயணிகளிடம் அத்து மீறுபவர்கள், ரயில்வே இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை ரயில்வே விதிகளின்படி பிடித்து சென்னையில் ரயில்வே நீதிமன்றங்க ளிலும், மற்ற இடங் களில் வழக்கமான நீதி மன்றங்களிலும் ஆஜர் படுத்தி அபராதம் வசூ லிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆர்பிஎப் நிலையமும் மாதத்திற்கு இவ்வளவு வழக்கு பதிவு செய்ய வேண்டும், இவ்வளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ரயில்வே இலக்கு நிர்ண யித்துள்ளது.

எனவே, ரயில்பா தையை யாராவது கடக் கிறார்கள் என்றால் ஆர்பிஎப் காவலர் தடுக்க மாட்டார்கள், அதற்காகவே காத்தி ருந்தது போல் ஓடிப் போய் பிடித்து அபரா தம்விதிக்கின்றனர். பேசின்பாலம் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே இருக்கும் வேலி யின் பின்புறம் ஒளிந்து கொள்கின்றனர்.

யாரா வது ரயில்பாதையை கடக்க முயன்றால் பாய்ந்து சென்று மடக்குகின் றனர். ஆர்பிஎப் ஒளிந்தி ருப்பதை யாராவது எச்சரித்தால், அவர்க ளையும் பிடித்து அபரா தம் விதிக்கின்றனர். இப்படி நேற்று காலை பேசின்பாலம் ரயில் நிலையதண்ட வாளத்தை கடந்த 45 பேரை ஆர்பிஎப் காவல் துறையினர் மறைந் திருந்து பிடித்தனர்.

பேசின்பாலம் உட் பட கும்மிடிபூண்டி, திருவள்ளூர், தாம்பரம், அரக்கோணம் மார்க் கங்களில் உள்ள புறநகர் ரயில் நிலையங்கள் எதி லும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் வந்து செல்ல வசதியான சாய்வுப் பாதை, பாலம் இல்லை. அதை சரி செய்யாத வரை ரயில்பாதையை கடப்பவர்கள் உயிரி ழப்பது தொடர்கதை யாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை: