தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், இதையடுத்து போலீசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் டிராஃபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடைபாதை கடைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டது.
ஆனால், தொடர்ந்து நடைபாதை கடைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்நதேன். இதையடுத்து போலீசாருக்கு நோட்டீஸ் நீதிமன்றம் அனுப்பியது. பின்னர் பிளவர் பஸார் பகுதிக்கு உட்பட்ட நடைபாதை கடைகளை போலீசார் அகற்றிவிட்டனர்.
இதனால் கொதிப்படைந்த அப்பகுதி நடைபாதை கடையினர் என் கையை வெட்டிவிடுவதாக மிரட்டினர். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக