திங்கள், 13 பிப்ரவரி, 2012

Vijayakanth: என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்

அருப்புக்கோட்டை:""என்னை சீண்டினால் பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்,'' என, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது: சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு தெரியும். 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. தினமும் 8 மணி நேர மின் தடை, தொழில் முடக்கம், மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மின்சாரத்திற்காக என்ன திட்டம் தீட்டினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுக்கப்படுகிறது. மின்சாரம் இருந்தால் தானே ஓடும். என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் பேச விடுங்கள். நீங்களாகவே பேசுவதற்கு மட்டும் சட்டசபை கிடையாது. டான்சி வழக்கில் என் கையெழுத்து இல்லை என்று சொல்கிறீர்கள். என் வாயை கிளறாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகி விடும்,'' என விஜயகாந்த் பேசினார்.

கருத்துகள் இல்லை: