அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி என்று சென்னையில் எல்.கே.அத்வானி பேசியதற்கான அர்த்தம் பெங்களூருவில் வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவின் சீனியர் வழக்கறிஞர்கள்.
ஜெ மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஜெ.வின் 313 ஸ்டேட்மெண்ட்டைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஸ்டேட் மெண்ட் தரவேண்டும். இது தொடர்பாக தமிழ் மொழிபெயர்ப்புகேட்டு சசிகலா தரப்பு தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்த தாலும், கூடுதல் விசா ரணைக்காக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பு செய்யா மல் முடிக்கவேண்டும் என்று உத்தர விட்டிருந்ததாலும் பிப்ரவரி 9-ஆம் தேதியன்று ஸ்பெ ஷல் கோர்ட் வளாகம் எதிர்பார்ப்புடன் இருந்தது.
காலை 10.30 மணிக்கு சசிகலா வந்தார். முகம் வாடியிருந்தது. தோற்றம் மெலிந்திருந்தது. அடிக்கடி கண்களைத் துடைத்தபடியே இருந்தார். எப்படியும் அவரிடம் 313 வாக்குமூலத்திற்கான கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவிடம் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், ""மொழிபெயர்ப்பு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் பண்ணியிருக்கிறோம். நம்பரும் ஆகிவிட்டது'' என்றவர், அந்த விவரங் களைச் சொல்லி, ""எனவே ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு மேல் தள்ளி வைக்கவேண்டும்'' என்றார்.
அரசு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா வேக மாக எழுந்தார். இந்த வழக்கு விசாரணையை இனி யும் காலம்தாழ்த்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதனால் உடனடி யாக விசாரணை தேதியை முடிவுசெய்ய வேண்டும் என்றார். கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப் பட்டிருக்கும் நிலையில், அவரது தரப்பிற்கு இந்த சொத்துக்குவிப்பு வழக்குதான் துருப்புச் சீட்டு என்றும், அதனால் மொழிபெயர்ப்பு கேட்டு அப்பீலுக்குப் போகா மல், 313 ஸ்டேட்மெண்ட்டுக்கு ரெடியாகி, ஜெ.வுக்கு நெருக்கடி கொடுப்பார் என்று பரவலாக எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், வழக்கு விவகாரத்தில் ஜெ. தரப் பின் எதிர்பார்ப்பிற்கேற்றபடிதான் சசிகலா இருக் கிறார் என்கிறார்கள் நிலவரங்களை கவனிக்கும் வழக் கறிஞர்கள். அ.தி.மு.க சார்பு வக்கீல்கள் பலரும் கோர்ட்டுக்கு வந்திருந்து சசிகலா தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
கோர்ட்டில் சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் 10 நாட்களுக்கு மேல் அவகாசம் கேட்க, அரசு வக்கீல் ஆச்சார்யா ஆகியோரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு மதிப்பளிப்பதாகக் (with due respect to public prosecutor Acharya) கூறி அடுத்த விசாரணை யை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத் தார். கோர்ட்டிலிருந்து வெளியே வந்த ஆச்சார்யாவின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. அவரது ஜூனியர்களிடம் நாம் பேசிய போது, கடந்த 24 மணிநேரத்தில் நடந்த சம்பவங்கள்தான் இதற்கு காரணம் என்றவர்கள், அது பற்றி விவரிக்கத் தொடங் கினார்கள். சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென 2002-ல் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தபிறகு, கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார் பற்ற ஜனதாதளம், பா.ஜ.க என பல அமைச்சரவைகள் மாறி விட்டன. எந்த அரசும் இந்த வழக்கில் தலையிடாமல் இருந் தன. எடியூரப்பா முதல்வராக இருந்தவரை இந்த நிலைமை இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
பிப்ரவரி 8-ஆம் தேதி காலையில் முதல்வர் சதானந்த கவுடாவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தார் ஆச்சார்யா. ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு கவர்னரை சந்தித்து, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். கவர்னரும் ஏற்றுக்கொண்டு அறிவித்தார். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் எடி யூரப்பா, ஆச்சார்யாவின் வீட்டுக்கே வந்து அரைமணிநேரம் பேசிவிட்டுப் போனார். பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நானும் அவரும் நீண்டகால நண்பர்கள். கொள்கைரீதியாக ஒன்றுபட்டவர்கள் என்றார் எடியூரப்பா. ஆனால், உண்மை வேறு.
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஆச்சார்யா ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்று முதல்வர் சதானந்த கவுடா தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். ஆச்சார்யா ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அவருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி தரப்பட்டது. பெரியபதவி கிடைத்தால் பி.பி பதவியை விட்டுவிடுவார் என்பது பா.ஜ.க கணக்கு. ஆனால் அவர் விடவில்லை. அதனால் ஒருவரே இருபதவிகளை வகிக்கக்கூடாது என அட்வகேட் தேவதாஸ் என்பவர் மூலம் பொதுநல வழக்குப் போடப் பட்டது. அந்த அட்வகேட்டுக்குத் தமிழக ஆளுங்கட்சி ஆதரவு ஆட்களோடு நல்ல நெருக்கம் உண்டு.
அத்துடன், ஆச்சார்யா டிரஸ்ட்டி யாக உள்ள பி.எம்.எஸ். கல்வி அறக் கட்டளை மீது நிலமோசடி புகாரும் லோக் ஆயுக்தாவில் கொடுக்கப்பட்டது. 8 முறை இதற்கு ஹியரிங் நடந்தும், புகா ருக்கான ஆதாரங் களை கொடுத்த பாடில்லை. ஆனா லும் இந்த டிரஸ்ட் விவகாரத்தைக் காட்டி ஆச்சார்யாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
முதல்வர் சதானந்தா கவுடாவிடம் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட் காரியே பேசி, ஜெ. வழக்கி லிருந்து ஆச் சார்யா ஒதுங்கவேண்டும் என்று வலி யுறுத்தியிருக்கிறார். கட்காரிக்கு அத்வானி யிடமிருந்து பிரஷராம். அத்வானியிடம் இதுபற்றி தொடர்ந்து வலியுறுத்தியிருப்ப வர், தமிழக ஆளுந்தரப்புக்கு வேண்டிய பத்திரிகையாளர். தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரும் வேறு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பெங்களூருவுக்கு வந்து, முதல்வரிடம் நெருக்கடி கொடுத்து நீதியை வளைக்க முயற்சித்தார்கள்'' என்றனர்.
நாம் ஆச்சார்யாவை சந்தித்தோம். ""என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால், இதில் அரசியல் இருக்கிறது. நான் என் கடமையைச் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார் தெளிவான குரலில்.
-பெங்களூருவிலிருந்து பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்
thanks nakkeran +raj trichy

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக