ஒரு வாரத்தில் சசிகலா பெயரில் பேரவை தொடங்க ஏற்பாடு: சங்கரன்கோவிலில் போட்டி
இது குறித்து தென்காசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட், சமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற சசிகலா தான் ஏற்பாடு செய்தார். ஆனால் இன்றைய நிலை வேதனை தருகிறது. முக்குலத்தோர் சமுதாயத்தின் சார்பில் சசிகலா பேரவை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கிறோம். 1 மாதத்தில் அது அரசியல் கட்சியாக மாற்றப்படும். சசிகலாவின் ஆலோசனைபடி தான் பேரவையை துவங்குகிறோம். சங்கரன்கோவில் தொகுதியில் 40,000 முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. சசிகலா பேரவை சார்பில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிடுவோம். பிரசாரத்திற்காக சசிகலாவும வருகிறார் என்றார்.
பேட்டியின் போது சசிகலா பேரவை தென்மண்டல அமைப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, கடையநலலூர் நகர தலைவர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக