ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயக் கொள்கையை உருவாக்கும் போது, ஸ்பெக்ட்ரத்தின் சந்தை மதிப்பு, திறன், முதலீட்டில் லாபம் மற்றும் கிராமப் புறங்களில் தொலைத் தொடர்பு சேவையை அதிகரிப்பது ஆகியவற்றை எல்லாம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) கருத்தில் எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை' என, "டிராய்' அமைப்பின் துணை ஆலோசகர் சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) துணை ஆலோசகர் வீரேந்திர கோயலை, முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.
இந்த வழக்கில் ராஜா குறுக்கு விசாரணை செய்த, இரண்டாம் சாட்சி இவர். பாட்டியாலா கோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. ராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் மனுசர்மா "ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயக் கொள்கையை உருவாக்கும் போது ஸ்பெக்ட்ரத்தின் சந்தை மதிப்பு, திறன், முதலீட்டில் லாபம் மற்றும் கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு சேவையை அதிகரிப்பது ஆகியவற்றை பற்றியெல்லாம், டிராய் கருத்தில் எடுத்துக் கொண்டதா? என்று கேட்டார். அது பற்றி தனக்கு தெரியாது என்று கோயல் பதிலளித்தார்.
எதுவும் தெரியாது: இதையடுத்து, மனு சர்மா "சி.பி.ஐ.,யிடம் நீங்கள் வாக்குமூலம் கொடுத்த போது, 2003 மற்றும் 2005 ம் ஆண்டுக்கான டிராய் அறிக்கை உங்களிடம் வழங்கப்பட்டதா? டிராயில் ஆலோசகராக பணியாற்றிய போது எப்போதாவது அதன் அறிக்கையை படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். அதற்கு, கோயல், "விசாரணையின் போது, டிராய் அறிக்கையை சி.பி. ஐ., என்னிடம் வழங்கவில்லை. தவிர, எனது பதவிக்காலத்தில் ஒரு முறைகூட டிராய் அறிக்கையை படித்து பார்த்ததில்லை. மேலும், சந்தாதாரர்கள் அதிகமாகும்போது, ஸ்பெக்ட்ரத்திற்கான சேவை கட்டணம் குறையுமா என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
அடுத்த வாரம் யார்? தொலைத் தொடர்பு அமைச்சராக ராஜா இருந்தபோது, அவருக்கு உதவிச் செயலராக இருந்த ஆசிர்வாதம் ஆச்சாரி, ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய சாட்சி. அவரைத்தான் முதலில் ராஜா குறுக்கு விசாரணை செய்தார். அதன் பிறகு எந்த சாட்சியையும் ராஜா குறுக்கு விசாரணை செய்யவில்லை. தற்போது, டிராயின் துணை ஆலோசகரை ராஜா குறுக்கு விசாரணை செய்திருக்கிறார். அடுத்த வாரம் டிராயின் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஷ்ராவை, ராஜா குறுக்கு விசாரணை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக