ஜெயலலிதா எச்சரிக்கை எதிரொலியாக, தமிழகம் முழுவதும் என்கவுன்டர் செய்யப்பட வேண்டிய ரவுடிகள், கொடூர குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாணவன் கடத்தல், வங்கிகளில் கொள்ளை, நகைக் கடைகளில் துளைபோட்டு கொள்ளை முயற்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் கொலை, அதிகாரிகளின் வீடுகளில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், சென்னை போலீஸ் எஸ்.ஐ.க்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ‘‘கொலையாளிகள், வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். முதல்வரே பச்சைக் கொடி காட்டி விட்டதால், மாநிலம் முழுவதும் ஏற்கனவே 10 ஆயிரம் ரவுடி களை போலீசார் பட்டியிலிட்டு வைத்துள்ளனர்.
அதில் கொடூர குற்றவாளிகள் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர் அதில், சுமார் 25க்கும் மேற்பட்ட கொலையாளிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் போலீ சார் கண் காணித்து வருகின்றனர். அதில் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள். இப்போதும் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களி லும், கடத்தல், கொலைகளி லும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் என் கவுன்டர் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக