வியாழன், 22 டிசம்பர், 2011

சசிகலா மூலம் பதவி தமிழகம் முழுவதும் மாறுதல் பட்டியல் தயார்


சென்னை : சசிகலா மூலம் பதவி பெற்ற போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் மாறுதல் உத்தரவுக்காக முதல்வரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர்களின் வீடுகளை உளவுத்துறை போலீசார் கண்காணிக்கின்றனர். யாரும் வெளிநாடு செல்கிறார்களா என விமானநிலையத்தை யும் கண்காணிக் கின்றனர்.
நேற்று முன்தினம் டிஜிபி ராமானுஜம் முதல் வரை சந்தித்தார். வெளி யேற்றப்பட்டவர்கள்  மூலம் பதவி பெற்றவர்கள் பட்டியலை தயாரிக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண் டதாக தெரிகிறது. அதை யடுத்து ராமானுஜம், நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், உளவு  துறை ஐஜி தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக ஆட்சி வந்த தும் மேற்கு மண்டலத்தில் கமிஷனராக இருந்து, மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்ட அதிகாரி, மத்திய மண்டலத்தில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டு, இப்போதும் அதே பதவியில் நீடிக்கும் அதிகாரி, சென்னையில் துணை கமிஷனராக இருந்து, இப்போது மேற்கு மண்டலத்தில் எஸ்பியாக உள்ள அதிகாரி, சென்னையில் ஒரு இணை கமிஷனர்,

 கடந்த ஆட்சியில் இருந்து இன்றுவரை  வடக்கு மண்டலத்தில் ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்பி, மேற்கு மண்டல கலெக்டர் மற்றும் அவரது போலீஸ் மனைவி ஆகியோர் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தாக கூறப்படுகிறது. இந்த பட்டியல் உடனடியாக போயஸ்கார்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஓரிரு நாளில் இந்த அதிகாரிகள் மாற்றம் பற்றி  அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையில் ஜெயலலிதாவின் வழக்குகளை சரியாக கையாளவில்லை என்றும், சில அதி காரிகள் சசிகலாவை மட் டும் காப்பாற்ற முயற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது. எனவே, அவர்களும்  மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

கட்சி நிர்வாக பணிகளில் இருந்து சசிகலா உறவினர்கள் நீக்கம்

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் தீவிர ஆதரவாளர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பில் உள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் மேலாளராக வேலைபார்த்த சசிகலா உறவினர் குமாரவேல் நீக்கப்பட்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் வேலை பார்த்த உறவினர்கள் குமார், தாமரை ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். தோட்டத்துக்கு வரும் புகார் மனுக்களை குமார் பெற்று  வந்தார். வரவு&செலவு கணக்குகளை தாமரை பார்த்து வந்தார்

கருத்துகள் இல்லை: