வியாழன், 22 டிசம்பர், 2011

திரைப்படத்துறையினர் மவுனம் சாதிப்பது ஏன்?



சத்தியராஜு சீமானு கவுண்டான் மணி போன்ற இனமான சிங்கங்கள் தற்போது மௌன விரதம் இருப்பதால் முல்லை பெரியாறு விவகாரமாக யாரும் எதுவும் கேட்க வேண்டாம் இன்று இத்தால் சகலரும் அறியக்கடவதாக.
கோவை சரவணம்பட்டியில் உள்ள கொங்கு நாடு முன்னேற்றக்கழக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம்,
’’கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மலையாளிகள் அனைவரும் இந்தியர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் கேரளாவில் உள்ள தமிழர்கள் தமிழர்களாவே கருத்தப்படுகின்றனர்.


தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழர்கள் கேரளா வில் தாக்கப்பட்டால் தமிழ கத்தில் உள்ள மலையாளிகள் கேரளாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கொ.மு.க. எச்சரிக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் ஒன்று திரண்டு எதிர்ப்பை காட்டி வரும் நேரத்தில் தமிழகத்தில் உள்ள திரைப்படத்துறையினர் மவுனம் சாதித்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களின் இந்த நிலை கேரள அரசிற்கு ஆதரவா?.

எதற்கும் முன்னணியில் நிற்கும் திரைப்பட துறையினர் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்காதது ஏன்? தொடர்ந்து இந்த நிலையை கடைபிடித்தால் தமிழ்ப்படங்களை பார்ப்பதையே பரிசீலனை செய்ய வேண்டியது வரும். திரைப்படத்துறையினருக்கு இதன் மூலம் கொ.மு.க. கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்பட்டாலும் தற்போது அதில் அதிகாரிகளின் போக்கு கடுமையாக உள்ளது.

விவசாயி தான் வசிக்கும் தோட்டத்தில் விவசாய தோட்டத்திற்கு ஒரு மோட்டார், வீட்டிற்கு ஒரு மோட்டார் என்று வைத்துக் கொள்ள முடியாது. எனவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: