தன் மகன் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு நடித்து சமீபத்தில் வெளிவந்த "ஒஸ்தி" படத்தை அடித்து பிடித்து., அடம் பிடித்து வாங்கி வெளியிட்டதன் மூலம் டி.ஆருக்கு சுமார் பத்து கோடி ரூபாய்க்கு மேலாக நஷ்டமாம். கிட்டத்தட்ட மிரட்டாத குறையாக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.22 கோடிக்கு ஒஸ்தி படத்தை வாங்கி தனது குறள் டி.வி.,கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியிட்டார் டி.ஆர்.
படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட்டம் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பதால் வசூல் இல்லையாம்! இதனால் ரூ.பத்து கோடி நஷ்டத்தில் டி.ஆர்., தவிக்கிறாராம். படத்தை அவருக்கு விற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தின் சிட்டி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வினியோக உரிமையை 22 கோடிக்கு டி.ஆருக்கு கொடுத்து விட்டு. சேட்டிலைட் உரிமையை 6 கோடிக்கும், எஃப்.எம்.எஸ்., எனப்படும் வெளிநாட்டு உரிமையை 3 கோடிக்கும் வேறு வேறு பார்டிகளிடம் கொடுத்து சுமார் ஐந்தாறு கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது. ஒஸ்தி படத்தை முதலில் தயாரித்த பாலாஜி பில்ம் மீடியா ரமேஷூக்கு ஐந்து கோடி லாபம் இருக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் டி.ஆரோ அம்மாடி, அய்யோடி, ஆத்தாடி... என புலம்பி வருகிறாராம் பாவம்! டி.ஆர்., பேராசைக்கு கிடைத்த நெத்தியடி., ரூ. 10 கோடி நஷ்டம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக